ஃபேஷன் அப்டேட்ஸ்… டிரெண்டியான ஹேர் கிளிப்புகள் மற்றும் ஹேர் ஜூவல்லரிகள்!

ஹேர் பேண்டுகள் மற்றும் கிளிப்புகளில் எத்தனை வெரைட்டி இருந்தாலும், நம்மிடம் இருப்பவற்றுள் நமக்கு எப்போதுமே திருப்தியே வருவதில்லை. ஒவ்வொரு முறையும் திருமண விழாக்கள், நண்பர்களுடனான சந்திப்புகள், அலுவலக கெட் டுகெதர்கள், பிறந்தநாள் பார்ட்டிகள், இலக்கியச் சந்திப்புகள், சுற்றுலாக்கள் என எங்கே செல்வதாக இருந்தாலும்… நமது ஆண்களுக்கு என்ன பாக்கெட் சீப்பில் அப்படி ஒரு இழுப்பு, இப்படி ஒரு இழுப்பாக தலைமுடியை வாரிக் கொண்டால் போதும் அவர்கள் ரெடி. 

ஆனால் பெண்களுக்கு அப்படி தலைவாறுதல் என்பது அத்தனை எளிதாகவா முடிந்து விடுகிறது? என்ன தான் முடியை பாப் கட் செய்து கொண்ட போதும் சில பெண்களுக்குத் தலைமுடியை அழகாக்கிக் காட்ட ஹேர் கிளிப்புகள் மற்றும் மெட்டல் பேண்டுகள் போன்றவை தேவைப்படுகின்றன. அதிலும் கூட கைக்குச் சிக்கும் ஏதோ ஒன்றை அணிந்து கொண்டு அவசரக் கோலத்தில் விழாக்களுக்குக் கிளம்ப எந்தப் பெண்களுக்கும் மனம் வராது. தம்மை அழகாகக் காட்டிக் கொள்வது, பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்குமான உரிமையும் கூட. அதனால் அதில் எந்தக் குறையும் சொல்வதற்கில்லை. 

ஆனால் சில சமயங்களில், மாலையில் கலந்து கொள்ளப் போகும் விழாவில் அணிந்து கொள்வதற்காக நாள் முழுக்க ஷாப்பிங் மால்களில் தேடினாலும் கூட நாம் விரும்பிய வண்ணம், நமது மனதுக்குத் திருப்தியாக ஒரு ஹேர் கிளிப்பையோ அல்லது ஹேர் பின்னையோ அல்லது சென்ட்டர் கிளிப்பையோ கூட நம்மால் உடனே வாங்கி விட முடியாது. முதலில் மனத்திருப்தி அமையாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ட்ரெண்டியான தலை அலங்கார ஜோடனைப் பொருட்கள் கிடைக்கும் இடங்களைப் பற்றிய நினைவூட்டலும் நமக்கு அப்போது கிட்டாமல் போய்விடும். இதனால் நேர விரயம் ஆவதோடு, மனம் விரும்பிய பொருள் கிட்டாத ஏமாற்ற உணர்வும் நமக்கு ஏற்பட்டு விடும். அதனால் விழாக்களுக்குச் செல்வதாக இருந்தால், முக்கியமாக பெண்களுக்கு, தலை அலங்கார ஜோடனைப் பொருட்களின் மீது ஆர்வமிருந்தால் அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே தமக்குரிய ஃபேஷன் அலங்காரப் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

இதோ இங்கே சில தலை அலங்கார ஃபேஷன் ஜூவல்லரி பரிந்துரைகளை உங்களுக்காகத் தருகிறோம். இங்கே புகைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் ஃபேஷன் கிளிப்புகள் அனைத்தும் சென்னையின் அனைத்து ஷாப்பிங் மால்களில் இருக்கும் ஷோ ரூம்கள் மற்றும் பெரிய ஃபேஷன் ஜூவல்லரி கடைகளில் கிடைக்கக் கூடியவை தான்.

இவற்றில் தங்களுக்குப் பொருத்தமானவை எவை எனத் தேர்ந்தெடுத்து, அதை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொண்டு தேவையான போது பயன்படுத்துவது மட்டுமே பெண்களுக்கான சாமர்த்தியம்!

சிக் ஹேர் ஸ்டட்ஸ்…

குட்டையான கூந்தல் இருப்பவர்கள் ‘சிக் ஹேர் ஸ்டட்ஸ்’ என்று சொல்லப்படக் கூடிய இந்த வகை ஹேர் கிளிப்புகளைப் பயன்படுத்தலாம்.

ஃபுளோரல் ஹெட் பேன்ட்ஸ்…

வின்டேஜ் ஹேர்பின்ஸ்…

ஸ்போர்ட்டி பேன்ட்ஸ்…

கிரெளன் பேன்ட்ஸ்…

ஹெட் பேன்ட்ஸ் வித் பீட்ஸ்…

பிரீசியஸ் ஹேர் ஜூவல்லரி…

சில்வர் & கோல்டு மெட்டல் பேன்ட்ஸ்…

போவ்ஸ்& ரிப்பன்ஸ்…

முகத்தை மறைக்கும் நெட்டுடன் கூடிய ஹேர் கிளிப்புகள்…

இம்மாதிரியான ஹேர் கிளிப்புகள் மற்றும் ஹேர்பின்களை நாம் அணியும் உடைகளுக்குத் தகுந்தவாறு தேர்ந்தெடுத்து நாம் கலந்து கொள்ளவிருக்கும் விழாக்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் ஏற்றவாறு பொருத்தமாக அணிந்து செல்லலாம்.

<!–

–>