அகர்வால், கில்லுக்குக் காயம்: பிசிசிஐ அறிவிப்பு

இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் ஷுப்மன் கில் காயம் காரணமாக பீல்டிங்கில் ஈடுபட மாட்டார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் பேட்டிங் செய்த இந்தியா 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து வெறும் 62 ரன்களுக்கு சுருண்டது.

தொடர்ந்து, 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், நியூசிலாந்து வெற்றிக்கு 540 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையும் படிக்கவலுவான நிலையில் இந்தியா…மோசமான தோல்வியை தவிர்க்குமா நியூசிலாந்து?

இந்த நிலையில் இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் காயம் காரணமாக பீல்டிங் செய்ய மாட்டார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது அகர்வாலின் கையில் காயம் ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பீல்டிங் செய்வதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

கில்லுக்கு நேற்று (சனிக்கிழமை) பீல்டிங்கின்போது விரலில் காயம் ஏற்பட்டதால், இன்றும் பீல்டிங் செய்ய மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கிலும் அவர் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்காமல், 3-வது வரிசை பேட்ஸ்மேனாகவே களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>