அக்ரஹாரம் இல்லை… இது அக்கரகாரம் எனும் மூலிகைச் செடி!

akkarakaaram_herb

விக்கலைப் பற்றி கூகுளில் தேடிக் கொண்டிருந்த போது. அதற்கு கை வைத்தியமாக வீட்டிலேயே செய்து கொள்ள ஒரு எளிதான டிப்ஸ் கிடைத்தது. அந்த டிப்ஸில் அக்ரகாரத்தையும், திப்பிலியையும் சரி சமமான அளவு எடுத்துப் பொடி செய்து தேன் கலந்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் தீரும். என்று சொல்லப்பட்டிருந்தது. விக்கலுக்கு முழு முதற்காரணமே நுரையீரல் பிரச்னை தானே… அது தீருமென்றால் இது விக்கலுக்கான அருமருந்து தானே என்று நினைத்தேன். 

ஆனால், திப்பிலி கேள்விப் பட்டிருக்கிறோம். இதென்ன அக்ரகாரம் என்றொரு புது வஸ்து. இது நிச்சயமாக அக்ரஹாரமாக இருக்க வாய்ப்பில்லை. அது தான் மூலிகையே இல்லையே! அப்படியெனில் அக்ரகாரம் என்றால் என்ன? என்று மேலும் தேடியதில் அப்படியொரு மூலிகை இருப்பது தெரிய வந்தது.

அக்கரகாரம் என்பது ஒருவகை மூலிகைச் செடி. 

விக்கல் தவிர அதன் பிற மருத்துவப் பயன்கள்…

  • அக்கரகாரம் பூ இலைகள் சாப்பிடும் போது உமிழ்நீர் சுரப்பு அதிகமாகும். ஒரு துண்டு வேரை ஊற வைத்து மென்று விழுங்க பல்வலி, மேல் அண்ண அழற்சி, தொண்டைக்கட்டு, தொண்டை வறட்சி, நா வறட்சி போன்ற பிரச்னைகள் தீரும்.அது மட்டுமல்ல அக்கரகாரம் பூவை எடுத்து வாயில் ஊற வைத்தீர்களென்றால் மின்சார ஒயரைக் கடித்தது போல நாக்கில் சுரு சுருவென்ற உணர்வு ஏற்படும்.
  • 30 கிராம் அக்கரகாரம் வேரைப் பொடியாக்கி 1 லிட்டர் தண்ணீரில் சுண்டக் காய்ச்சி தினந்தோறும் பற்கள் முழுவதையும் நனைக்கும் வண்ணம் வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி, பல் ஆட்டம் குறையும்.
  • அக்கரகாரம் மூலிகை ஆண்மையை பலப்படுத்தும் மாமருந்துகளில் ஒன்று.
  • இந்த மூலிகையின் சூரணம் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்.
  • இந்த மூலிகைச் செடியை தற்போது நர்சரி கார்டன்களில் கூட சரளமாகப் பெற முடியும். இவற்றை விதைகள் மற்றும் தண்டுடன் கூடிய வேர்களைக் கொண்டும் வளர்க்க முடியும்.

<!–

–>