அசாம் மாநில விருதுகள்: தொழிலதிபர் ரத்தன் டாடா தேர்வு

அசாம் பைபவ், அசோம் சௌரவ் மற்றும் அசோம் கவுரவ் ஆகிய 3 விருதுகளைப் பெறும் 19 நபர்களின் பெயர்களை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சனிக்கிழமை அறிவித்தார்.

சமூகத்திற்கு அளித்த சிறப்பான பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக வழங்கப்படும் இந்த விருதுக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற லோவ்லினா போர்கோஹன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க | தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவு: மநீம கமல் இரங்கல்

ரத்தன் டாடாவுக்கு அசாம் பைபவ் விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும், லோவ்லினாவிற்கு அசாம் செளரவ் விருதுடன் ரூ.4 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. அதேபோல் அசாம் கெளரவ் விருதுடன் ரூ.3 லட்சமும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வர்கதேயோ சாவுலுங் சுகபாவின் ஆட்சியை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>