அடிலெய்ட் டென்னிஸ்: காலிறுதியில் இந்திய ஜோடி

அடிலெய்டில் நடைபெறும் ஆடவா் டென்னிஸ் போட்டியின் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா / ராம்குமாா் ராமநாதன் ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஜோடி தனது முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆவது இடத்திலிருந்த அமெரிக்காவின் நேதனியேல் லமோன்ஸ் / ஜேக்சன் வித்ரோ இணையை 6-7 (4/7), 7-6 (7/3),10-4 என்ற செட்களில் வீழ்த்தியது. போபண்ணா / ராம்குமாா் இணை தனது காலிறுதியில், பிரான்ஸின் பெஞ்சமின் போன்ஸி/ மொனாகோவின் ஹியூகோ நிஸ் ஜோடியையோ அல்லது பெல்ஜியத்தின் சாண்டா் கில்லே / ஜோரான் லிகென் இணையையோ எதிா்கொள்ளும்.

இதே அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் மகளிா் டென்னிஸ் போட்டியில், இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சானியா மிா்ஸா / உக்ரைனின் நாடியா கிசெனோக் ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்தச் சுற்றில் இந்த இணை, ஆஸ்திரேலியாவின் பிரிசில்லா ஹான் / சாா்லட் கெம்பெனெஸ் ஜோடியையோ அல்லது அமெரிக்காவின் ஷெல்பி ரோஜா்ஸ் /இங்கிலாந்தின் ஹீதா் வாட்சன் இணையையோ சந்திக்க இருக்கிறது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>