அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவேனா? தோனி புதிய தகவல்

ஐபிஎல் 2022-இல் விளையாடுவது குறித்து முடிவெடுக்க இன்னும் நிறைய நேரம் இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி சனிக்கிழமை தெரிவித்தார்.

சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி இதுபற்றி கூறியது:

“ஐபிஎல் 2022-இல் விளையாடுவது குறித்து ஆலோசிக்கவுள்ளேன். தற்போது நவம்பரில் உள்ளோம். ஐபிஎல் 2022 ஏப்ரலில்தான் நடைபெறும். அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. அவசரமாக முடிவெடுக்க வேண்டிய தேவையில்லை” என்றார் தோனி.

இதையும் படிக்கடி வில்லியர்ஸ் ஓய்வுக்கு விடியோ; கிழித்துத் தொங்கவிடும் ரசிகர்கள்: அவானாவுக்கு இதெல்லாம் தேவையா?

முன்னதாக, கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பை வென்று அசத்தியது. அப்போதும், அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து தோனி உறுதிபடத் தெரிவிக்கவில்லை. புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கவுள்ளதால், அதைப் பொறுத்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என்பதையும் தோனி குறிப்பிட்டிருந்தார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>