அடேங்கப்பா! இவங்கள மாதிரி யோகா டீச்சர்கள் கிடைச்சா, யோகா கத்துக்கிட கசக்குமா என்ன?

யோகா என்றாலே காத தூரம் ஓடக்கூடியவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் யோகா என்றாலே ஏதோ உடற்பயிற்சி, தியானம் என்ற எண்ணமிருப்பதால் தான் அப்படி உணர்கிறார்கள். ஆனால், யோகாவை சுவாரஸ்யமாகக் கற்றுத்தர அருமையான ட்ரெய்னர்கள் கிடைத்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் நீங்கள் யோகா செண்ட்டரே கதி என்று கிடக்க வேண்டியது தான். அப்படி ஒரு அற்புதமான கலை இது. அதிலும் அழகு மற்றும் இளமையுடன் யோகாவில் பெரும் ஈடுபாடும் கொண்ட ட்ரெய்னர்கள் கிடைத்து விட்டார்கள் என்றால் பிறகு யோகாவைப் போன்ற ஒரு அற்புதமான ஃபிட்னஸ் மந்திரத்தை நம்மால் அத்தனை எளிதில் புறக்கணித்து விட முடியாது.

பாலிவுட் செலிபிரிட்டிகளில் பலருக்கு யோகாவில் ஆழமான ஈடுபாடு உண்டு. அவர்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டாலும் மன அமைதிக்காகவும், தேவையற்ற மன அழுத்தங்களில் இருந்து விடுபடவும் யோகாவுக்கும் தங்களது அன்றாட வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க அளவிலான நேரத்தை ஒதுக்கத் தவறுவதில்லை. யோகா என்றால் வெட்டவெளியிலோ அல்லது பூட்டப்பட்ட பெரிய ஏ சி அறைகளிலோ ஓம் சாண்ட்டிங் மந்திரத்துடன் தியானம் செய்வது மட்டுமல்ல, அதிலும் ஏரியல் யோகா, காஸ்மிக் ஃபியூஷன் யோகா, ஆண்ட்டி கிரேவிட்டி யோகா, அஸ்டாங்க யோகா, எனப் புதிது புதிதாக முயற்சிக்கிறார்கள். அப்படி பாலிவுட்டையே யோகா மந்திரத்தால் கட்டி வைத்திருக்கும் டாப் 5 யோகா ட்ரெய்னர்களைப் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

அடேங்கப்பா! இவங்கள மாதிரி யோகா டீச்சர்கள் கிடைச்சா, யோகா கத்துக்கிட கசக்குமா என்ன?

அனுஷ்கா பர்வானி

அன்ஷுகா ஏரியல் (பறவைகளைப் போன்று பறந்துகொண்டே செய்யும் ஒருவிதமான யோகக் கலை) யோகா கலையில் வல்லவர். இவரிடம் ஏரியல் யோகா கற்றுக் கொள்ளும் பாலிவுட் செலிபிரிட்டிகள் யாரெல்லாம் என்றால்… கரீனா கபூர் கான், சயீஃப் அலி கான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், துஷார் கபூர் உள்ளிட்டோரைக் கூறலாம். இவர்களில் கரீனாவுக்கு தனிப்பட்ட பெர்ஸனல் யோகா ட்ரெய்னராக கோல்மால், வீ ஆர் தி ஃபேமிலி உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவமும் அன்ஷுகாவுக்கு உண்டு. தற்போது கடந்த மூன்று ஆண்டுகளாக ஜாக்குலினுக்கு தொடர்ந்து ஏரியல் யோகா இன்ஸ்ட்ரக்டராகச் செயல்பட்டுவ் அரும் அன்ஷுகாவுக்கு யோகாவின் மீதான ஆர்வம் அவரது அம்மாவிடமிருந்து கடத்தப்பட்டதாகக் கூறுகிறார். அவரது அம்மாவும் ஒரு யோகா குரு தான். இவை தவிர, யோகா மூலமாக மட்டுமே தனது கடுமையான காயங்களில் இருந்து விடுபட முடிந்ததாக அன்ஷுகா கருதுகிறார். அதனால் யோகா தனக்குஅளித்த நம்பிக்கையை தன்னிடம் யோகா கற்றுக் கொள்ள வரும் அனைவருக்கும் கடத்த விரும்புவதாக அனுஷுகா கூறுகிறார். 

தியானி பாண்டே

தியானி பாண்டே மும்பைக்கு ஆன்டிகிராவிட்டி யோகாவை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர். அவர் பிபாஷா பாசு, லாரா தத்தா, குணால் கபூர் மற்றும் அபய் தியோல் ஆகியோருக்கு யோகா ட்ரெய்னராகச் செயல்பட்டு வருகிறார். யோகாவை மையமாக வைத்து இதுவரை இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். அவை முறையே 1. ஷட் அப் அண்ட் ட்ரெய்ன் (Shut up and Train)’ மற்றும் ‘நான் அழுத்தமாக இல்லை: அமைதியான மனது மற்றும் ஆரோக்கியமான உடலுக்கான ரகசியங்கள்’ (I’m Not Stressed: Secrets for a calm mind and a healthy body’). தியானி பாண்டேவுக்கும் பாலிவுட்டுக்கும் இருக்கும் மற்றொரு நெருக்கமான தொடர்பு என்றால் அது இவர் சங்கி பாண்டேவின் அண்ணியாகவும், அனன்யா பாண்டேவின் அத்தையாகவும் இருப்பது தான்.

பாயல் கித்வானி திவாரி

பாலிவுட் பிரபலங்களான கரீனா கபூர் கான், சைஃப் அலி கான், மலாய்க்கா அரோரா, ஃபர்ஹான் அக்தர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மறைந்த ஸ்ரீதேவி கபூர், ராணி முகர்ஜி உள்ளிட்ட பலருக்கு காஸ்மிக் ஃபியூஷன் யோகா பயிற்றுவிப்பாளராக இருக்கிறார் பாயல் கித்வானி. யோகாவில் மேலும் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு தனது இண்டீரியர் டிஸைனர் வேலையைக் கூட இழக்கத் தயங்காதவர் பாயல். யோகா பயிற்சியை மையமாக வைத்து இதுவரை பாயல் திவாரி நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார் – அவை முறையே, 1.ஓன் தி பம்ப், 2. யோன் சே யோவன் தக், 3. உடல் தேவதை: பெண்களுக்கான முழுமையான யோகா வழிகாட்டி,  4. எக்ஸ்எல் முதல் எக்ஸ்எஸ் வரை: உங்கள் உடலை மாற்றுவதற்கான உடற்தகுதி குருவின் வழிகாட்டி போன்றவை.

ராதிகா கார்லே

சோனம் கபூரின் ஒல்லியான உடல்வாகுக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருப்பார்களெனில் அதற்கான முழு கிரெடிட்டும் ராதிகா கார்லேவையே சேரும். யோகா மற்றும் பைலேட்ஸ் இன்ஸ்ட்ரக்டரான ராதிகா மும்பையில் ‘பேலன்ஸ் பாடி’ எனும் ஃபிட்னஸ் ஸ்டுடியோ ஒன்றின் உரிமையாளராகவும் இருக்கிறார். இவரிடம் ஃபிட்னஸ் பயிற்சி எடுத்துக்கொள்ளும் பாலிவுட் செலிபிரிட்டிகள் யாரெல்லாம் என்றால்… சோனம் கபூர், நர்கீஸ் ஃபக்ரி, கிருத்திகா ரெட்டி, தான்யா காவ்ரி மற்றும் ரியா கபூர்.

தீபிகா மேத்தா

பாலிவுட்டின் மோஸ்ட் ஃபேமஸ் அஸ்டாங்கா யோகா குரு யார் என்றால் அது தீபிகா தான். 1997 ஆம் ஆண்டு மலையேற்றப் பயிற்சியின் போது மோசமான விபத்தில் சிக்கி மரணத்தை வெகு நெருக்கத்தில் கண்டு தப்பியவர் தீபிகா. தப்ப உதவியது யோகப் பயிற்சி என்கிறார். விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்தவரிடம் டாக்டர்கள்… இனிமேல் பழையபடி எழுந்து நடப்பதே சிரமம் என்று கூறி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் இருந்து தன்னை மீட்டு மீண்டும் பழைய தீபிகாவாக மாற்றியது யோகா தான் என்கிறார் அவர். இன்றைக்கு தீபிகா வெறும் ஃப்ட்னஸ் எக்ஸ்பர்ட் மட்டுமல்ல. தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ப்ரியங்கா சோப்ரா, ப்ரீத்தி ஜிந்தா, வித்யா பாலன், லிஸா ஹெய்டன், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், அலியா பட், விது வினோத் சோப்ரா, அனுபமா சோப்ரா, நேஹா துபியா, நிம்ரத் கெளர் என பல பாலிவுட் செலிபிரிட்டிகளுக்கு டயட் மற்றும் லைஃப்ஸ்டைல் அட்வைஸராக இயங்கி வருகிறார்.
 

<!–

–>