அதர்வா, சரத்குமார், ரகுமான் இணையும் 'நிறங்கள் மூன்று': முதல் பார்வை போஸ்டர் இதோ

துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அந்தப் படம் விம்ரசன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அரவிந்த் சாமி நடிப்பில் நரகாசூரன் என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. 

இதனையடுத்து அருண் விஜய் மற்றும் பிரசன்னா இணைந்து நடித்த மாஃபியா படத்தை கார்த்திக் நரேன் இயக்கினார். அந்தப் படம் பெரும் தோல்வியடைந்தது. தற்போது தனுஷ் நடிப்பில் மாறன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. 

இதையும் படிக்க | இன்றுமுதல் ‘வாத்தி’யாராக வகுப்பெடுக்கும் தனுஷ்: வெளியான தகவல்

இந்த நிலையில் கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறங்கள் மூன்று என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அதர்வா, சரத்குமார், ரகுமான் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இநத்ப் படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க, டிஜோ சாமி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் குறித்த இதர தகவல்கள் விரைவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>