அதிக கோல்கள்: ரொனால்டோ சாதனை

 

கால்பந்து விளையாட்டில் 800 கோல்கள் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ.

போா்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார். லண்டனில் நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டி ஒன்றில் ஆர்செனல் அணிக்கு எதிராக விளையாடி இரு கோல்கள் அடித்து 3-2 என தன்னுடைய அணி வெற்றி பெற உதவினார்.

இதன்மூலம் தன்னுடைய நாட்டுக்காகவும் கிளப்புக்காவும் விளையாடிய ஆட்டங்களில் 800 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த இலக்கை அடைந்த முதல் வீரர் என்கிற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். 1095 ஆட்டங்களில் 801 கோல்களை அடித்துள்ளார் 36 வயது ரொனால்டோ. சர்வதேச ஆட்டங்களில் 115 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>