அதிக வெயிலினால் முகம் கறுத்துவிட்டதா?

வெயில் நேரத்தில் அதிக நேரம் வெளியே சென்றால் சிலருக்கு முகம் கருப்பாக மாறிவிடும். மேக்அப் எல்லாம் கலைந்து அது சருமத்தில் எரிச்சலையும் உண்டாக்கும். வியர்வையுடன் முகத்தில் போட்டிருந்த கிரீமும் சேர்ந்து ஒருவித அசௌகரியத்தைத் தரும்.

மேலும், அதிக நேரம் வெயிலில் இருந்தாலோ சிலருக்கு சருமத்தில் சில பழுப்பு கோடுகள் தோன்றலாம். இதற்கு ஒரு எளிய தீர்வு இருக்கிறது. தேன் மற்றும் எலுமிச்சைச் சாறைக் கொண்டு இதனை சரிசெய்யலாம். 

ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு எலுமிச்சை சாற்றை பிழிந்துவிடவும். பின்னர் இந்த கலவையை நன்றாகக் கலக்கி முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின் 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். எலுமிச்சையில் இயற்கையான ப்ளீச்சிங் பண்புகள் இருப்பதாலும் தேன், சருமத்தை ஈரப்பதமாக்கும் என்பதாலும் முகத்தில் கருமை நீங்கிவிடும். 

எலுமிச்சைச் சாற்றை அப்படியே பயன்படுத்துவதற்கு பதிலாக சில துளிகள் நீர் விட்டு பயன்படுத்த வேண்டும். 

தேனுக்கு பதிலாக முகத்தில் ஈரப்பதத்தை அளிக்கும் கற்றாழை ஜெல், வெள்ளரிச் சாறு உள்ளிட்ட உங்களுடைய சருமத்திற்கு ஏற்றவாறு பொருள்களை பயன்படுத்தலாம். எனினும் எலுமிச்சை சாறு- தேன் கலவை சிறந்த தீர்வாக இருக்கும். 

இதையும் படிக்க | ‘ஆயில் மசாஜ்’ ஏன் செய்ய வேண்டும்?

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>