அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படைகள்

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் வரை மோசடி செய்த புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரைச் சோ்ந்த ஒருவருக்கு ஆவினில் மேலாளா் பணி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 30 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்பட 3 போ் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சிறு குறு மற்றும் நடுத்தர துறையின் நிலை என்ன? ராகுல் காந்தியின் கேள்வியும் மத்திய அரசின் பதிலும்

 

இந்த வழக்கை மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வெள்ளிக்கிழமை காலை இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்த்ர பாலாஜியைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க | லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை மிரட்டினாரா முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்?

இந்நிலையில் கே.டி.ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>