அனிருத் இசையில் பிரபல நடிகரின் படத்தில் பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நகைச்சுவை நடிகர் சதிஷ் நாய் சேகர் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியானது. 

இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் அனிருத் இசையமைக்கிறார். அந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து இந்தப் பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இதையும் படிக்க | மீண்டும் இணையும் நடிகர் விஜய் – அட்லி கூட்டணி? ஏமாற்றத்தில் ரசிகர்கள்

சிவகார்த்திகேயனும் நடிகர் சதிஷும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், தனது நண்பர் சதிஷுக்கு சிவகார்த்திகேயன் பாடல் எழுத சம்மதித்திருக்கலாம். நாய் சேகர் படத்தில் சதிஷிற்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பவித்ரா நடிக்கிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>