அனிருத் இசையில் வெளியான ஹிந்தி பட டிரெய்லர்

நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தெலுங்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜெர்ஸி’. கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மிக உணர்வுப்பூர்மாக பேசிய இந்தப்  படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். 

இந்தப் படம் ஜெர்ஸி என்ற பெயரில் ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கில் இயக்கிய கௌதம் தின்னனூரியே ஹிந்தியிலும் இயக்கியுள்ளார். 

இதையும் படிக்க  | ஓடிடியில் வெளியான மலையாளப் படத்தின் சென்சார் செய்யப்படாத பதிப்பு: வலுக்கும் கண்டனம்

இந்தப் படத்தின் பாடல்களுக்கு சச்செட் மற்றும் பரம்பரா ஆகியோர் இசையமைக்க, அனிருத் இந்தப் படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளார். தெலுங்கைப் போலவே இந்தப் படம், ஹிந்தியிலும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>