அன்பை பரிமாறிக்கொண்ட சிம்புவும், கீர்த்தி சுரேஷும் : மகிழ்ச்சியில் ரசிகர்கள்

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்துக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது. மேலும் படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக நடிகை கீர்த்தி சுரேஷ் தனது  ட்விட்டர் பக்கத்தில், ”மாநாடு படத்துக்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து நல்ல கருத்துகள் வெளியாகி வருகின்றன. சிறப்பான படத்தைக் கொடுத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க | மிதாலி ராஜ் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

அந்தப் பதிவுக்கு நடிகர் சிம்பு நன்றி தெரிவித்து ஹார்ட் ஸ்மைலியை பகிர்ந்திருந்தார். பதிலுக்கு கீர்த்தி சுரேஷும் ஹார்ட் ஸ்மைலியை பகிர, ரசிகர்கள் மகிழ்ச்சியைடந்துள்ளனர்.  இருவரும் இணைந்து விரைவில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>