அப்பாவான பிக்பாஸ் ஆரவ் : பிரபலங்கள் வாழ்த்து

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆரவ். இந்த நிகழச்சியின் டைட்டில் வின்னரானார். முன்னதாக ‘சைத்தான்’ உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அவருக்கு புகழ் வெளிச்சத்தைக் கொடுத்தது. 

பிரபல இயக்குநரான சரண் இயக்கத்தில் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து அவர் நடித்துள்ள ‘ராஜ பீமா’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. இந்தப் படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசப்பட்ட ஓவியாவுடன் இணைந்து நடித்துள்ளார். 

இதையும் படிக்க | வெற்றிப் பட இயக்குநருடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்: வெளியான தகவல்

நடிகர் ஆரவிற்கும் கௌதம் மேனனின் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தில் கதாநாயகியாக நடித்த ராஹேயை கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் இத்தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். இதனையடுத்து இருவருக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>