அப்பாவுடன் இணைந்து நடிக்கும் ஷிவானி

ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நாயகனாக நடித்தவர் ராஜசேகர். இவரது மனைவி ஜீவிதாவும் பிரபல நடிகை. இவர்களுக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என இரண்டு மகள்கள் உள்ளனர். 

இருவரும் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இதில் ஷிவானி தமிழில் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து நடித்த அன்பறிவு சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருந்தது. 

இதையும் படிக்க | அர்ஜுன் தாஸின் பெற்றோரை சந்தித்த சூர்யா : உருக்கமான பதிவு

இந்த நிலையில் ஷிவானி தனது அப்பாவுடன் இணைந்து சேகர் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இதனை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார். இந்த தகவல் தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>