அயர்லாந்து தொடருடன் கிறிஸ் கெயில் ஓய்வு பெறுகிறாரா?

 

அயர்லாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், ஒரு டி20யில் விளையாடவுள்ளது.

ஜமைக்காவில் நடைபெறும் 4 ஆட்டங்களும் ஜனவரி 8 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. டி20 ஆட்டம் ஜனவரி 16 அன்று நடைபெறுகிறது. 

டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயில், தனது கடைசி ஆட்டத்தைச் சொந்த ஊரான ஜமைக்காவில் விளையாட விருப்பம் தெரிவித்தார். அதேபோல அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒரு டி20 ஆட்டம் ஜமைக்காவில் நடைபெறவுள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் பங்கேற்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிறிஸ் கெயில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் அணியில் கிறிஸ் கெயில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றபோதும் கடைசி ஆட்டம் என்பதால் டி20 அணியில் அவர் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 

சொந்த மண்ணில் கிறிஸ் கெயில் கடைசியாக விளையாடி விடைபெறுவது பொருத்தமாக இருக்கும். அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் அதற்கான வாய்ப்பாக அமையும் என மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜானி கிரேவ், கடந்த மாதம் பேட்டியளித்தார். 

42 வயது கிறிஸ் கெயில் – 103 டெஸ்டுகள், 301 ஒருநாள், 79 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>