'அயலான்'? 'வெந்து தணிந்தது காடு'? : ரஹ்மானின் அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்

 

ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது விக்ரமின் ‘கோப்ரா’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, பார்த்திபனின் ‘இரவின் நிழல்’, சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ”வருகிற டிசம்பர் மாதம் தமிழ் படத்தின் இசை வெளியாகவிருக்கிறது. யூகியுங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரசிகர்களும் ‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ என தங்களது யூகங்களை தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிக்க | விஜய் சேதுபதி குரல் கொடுத்த ‘கடைசீல பிரியாணி’: ருசிக்கலாமா? திரைப்பட விமர்சனம்

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்திலும், விக்ரமின் ‘கோப்ரா’ படத்திலும் தலா ஒரு பாடல் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களின் மற்ற பாடல்கள் குறித்த அறிவிப்பாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.  

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>