அருணாச்சலில் இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் படுகாயம்

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-17 வகை விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.

இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்-17 வகையிலான ஹெலிகாப்டரானது வானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறுக்குள்ளானது. உடனடியாக ஹெலிகாப்டரை தரையிறங்க விமானி முயன்றார்.

இதையும் படிக்க | ஸ்வீடனில் கடுமையாகும் கரோனா கட்டுப்பாடுகள்

அப்போது ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. லோகித் மாவட்டத்தில் நடந்த இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 2 விமானிகள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். 

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>