அறியாமை இருளை அகற்றி அறிவொளி தீபத்தை ஒளிரச் செய்யட்டும்: தமிழக ஆளுநர் தீபாவளி வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

தமிழ்நாடு மற்றும் நம் தாய்திருநாட்டின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய மற்றும் பசுமைத் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீபங்களின் திருநாளாம் தீபாவளித் திருநாள் நன்மையின் குன்றா வலிமையையும் தீமைகள் அனைத்தையும் வென்றெடுக்கும் அதன் ஆற்றலையும் கொண்டாடும் பொன்னாளாகும். வாய்மையும் அறமுமே இறுதியில் வெல்லும் என்பதை இத்திருநாள் எடுத்தியம்புகிறது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அறியாமை இருளை அகற்றி அறிவொளி எனும் தீபத்தை இத்திருநாள் ஒளிரச் செய்யட்டும். இந்த தீபாவளி நம் அனைவரின் வாழ்வில் அமைதியையும் ஒற்றுமையையும் வளமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கட்டும் என ஆளுநர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>