அறிவிக்கப்பட்டு வெளியாகாத சூர்யா படம்: ரசிகர்கள் ஏமாற்றம் – என்ன நடந்தது?

சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், உடன் பிறப்பே, ஜெய் பீம், ஓ மை டாக், ஆகிய நான்கு படங்களை தயாரித்தார். இந்த 4 படங்களும் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதில் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படம் செப்டம்பர் மாதமும், உடன் பிறப்பே திரைப்படம் அக்டோபர் மாதமும், ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் மாதமும், ஓ மை டாக் திரைப்பம் டிசம்பர் மாதமும் வெளியாகும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையும் படிக்க | வெளியானது குக் வித் கோமாளி 3 ப்ரமோ: இந்த முறை யாரெல்லாம் கோமாளிகள்?

இதில் முதல் 3 படங்களும் சொன்னபடி அந்தந்த மாதங்களில் சரியாக வெளியானது. ஆனால் இந்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட ஓ மை டாக் திரைப்படம் குறித்து எந்த தகவலும் இல்லை. இன்னும் 2 நாட்களில் இந்த மாதம் முடிவடையவிருகக்கிறது. தயாரிப்பு தரப்பில் இருந்தும் அமேசான் பிரைம் தரப்பில் இருந்தும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாதது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. 

இந்தப் படத்தில் நடிகர் விஜயகுமார் அவரது மகன் அருண் விஜய், அருண் விஜய்யின் மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உருவானது. இந்தப் படத்தை சரோவ் சண்முகம் இயக்கியுள்ளார். 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>