அறிவியல் ஆயிரம்: வினோத முகடுள்ள புதிய டைனோசரின் தலை உருவாக்கம்

பாராசரோலோபஸ் (Parasaurolophus) என்ற  டைனோசர் வட அமெரிக்காவில் துவக்க கால கிரெட்டேசியஸ் காலத்தில் சுமார் 76.5 – 73 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது. இது டைனோசர்களின் ஹட்ரோசாரிட் இனமாகும்; பறக்கும் வகையைச் சேர்ந்த தாவர உண்ணி பல்லி.

இதன் நீளம் சுமார் 10 மீ; உயரம்: 5.2 மீ; எடை சுமார் 3500 கிலோ. பாராசரோலோபஸ் பெரும்பாலும் இரு கால்களால் நடக்கும், ஓடும். ஓய்வெடுப்பது பெரும்பாலும் நான்கு கால்கள் மீதுதான். இதற்கு முன்னங்கால் என்ற  இரண்டு வலுவான கைகள், ஒரு செதில் தோல் மற்றும் ஒரு சக்திவாய்ந்த வால் ஆகியவை இருந்தன.

தலையில் இருந்து நீண்டுகொண்டிருக்கும் நீண்ட வளைந்த முகடு, பெரும்பாலும் பெண்களைவிட ஆண்களில் அதிக நீளம் உடையது. இந்த உறுப்பு அநேகமாக ஆண்களாலும் பெண்களாலும் உள்ளார்ந்த தகவல் தொடர்புக்காகவும் ஆண்களால் காட்சிப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது. இவைகளில் பி.வாக்கேரி, பி. ட்யூபிசென், பி. சிர்டோக்ரிஸ்டேட்டஸ்  என்ற மூன்று இனங்கள் இருந்தன. ஆனால் அவற்றில் இரண்டு இனங்கள் எச்சங்களால் மட்டுமே அறியப்படுகின்றன. ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் தோன்றும் பாராசரோலோபஸ் வாக்கேரி மிகவும் பிரபலமானது. இந்த டைனோசரின் வளைந்த முகடு குறித்து நிறைய சர்ச்சைகள் எழுந்துள்ளன.  

எச்சத்திலிருந்து தலை உருவாக்கம்

ஒரு பாராசரோலோபாஸின் எச்சங்கள் 2017ல் வட அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களின் அடிப்படையில் பாராசரோலோபஸ் சிர்டோக்ரிஸ்டேட்டஸ் (Parasaurolophus cyrtocristatus) என்ற டைனோசரின் தலையை உருவாக்கி உள்ளனர். 2017ல் கண்டுபிடித்த பாராசரோலோபஸின் எச்சங்களை வைத்து தலையாக உருவாக்க 3 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

ஒரு நூற்றாண்டுக்கு முன் 1922-ல், முதன்முதலில் அரிய டைனோசரான பாராசரோலோபஸ் சிர்டோக்ரிஸ்டேட்டஸின் முதல் புதிய மண்டை ஓட்டை வில்லியம் பார்க்ஸ் (William Parks) கனடாவின் அல்பெர்ட்டாவில் (Alberta)  கண்டுபிடித்தார். இதையடுத்து கடந்த 2017ல் நியூ மெக்சிகோவின் வறண்ட மோசமான நிலத்தில் புதிய எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது அதன் தனித்துவமான முகடுக்கு மிகவும் பிரபலமானது, பராசரோலோபஸ் மிகவும் அடையாளம் காணக்கூடிய டைனோசர்களில் ஒன்றாகும்.

டைனோசர் – பாராசரோலோபஸின் மண்டையிலிருந்து வளர்ந்து வரும் ஒரு வினோதமான மற்றும் விரிவான முகடு ஆச்சரியமானது. அதன் மிகப் பெரிய இடத்தில் ஒரு வெற்றுக்குழாயை உருவாக்குகிறது. அதன் இந்த முகடு எப்படி வளர்ந்தது என்பதைப் புதைபடிவவியலாளர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

அதன் தீவிர உருவவியல் இருந்தபோதிலும், மாதிரியின் விவரங்கள் பிற, தொடர்புடைய வாத்து அலகு டைனோசர்களின் முகடுகளைப் போலவே முகடு உருவாகிறது என்பதைக் காட்டுகிறது. டென்வர் நேச்சர் அண்ட் சயின்ஸ் அருங்காட்சியகத்தில் டைனோசர்களின் கியூரேட்டரும், மாதிரியைக் கண்டுபிடித்த குழுவின் தலைவருமான ஜோ செர்டிச், “இந்த மாதிரி ஒரு மூதாதையரிடமிருந்து உருவாகும் அற்புதமான உயிரினங்களுக்கு ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு” என்றார்.

அமெரிக்காவின் வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தின் பழங்காலவியலாளரும், முதன்மை ஆசிரியருமான டெர்ரி கேட்ஸ்  (Terry Gates) அரிய டைனோசர் பாராசரோலோபஸ் சிர்டோக்ரிஸ்டேட்டஸ் பற்றி பீர்ஜே (PeerJ) என்ற பத்திரிகையில்  விளக்குகிறார். அதாவது நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள் “உங்கள் மூக்கு மற்றும் உங்கள் முகத்தை உயர்த்தி நீளமாக வளர்த்துக் கொள்ளுங்கள், உங்கள் தலைக்கு மூன்று அடி பின்னால், பின்னர் உங்கள் கண்களுக்கு மேலே இணைக்கத் திரும்புங்கள்” என்கிறார்; ஏதாவது புரிகிறதா. ஆனால் அப்படித்தான் இருக்கிறது பாராசரோலோபஸ்.

புதிய பாராசரோலோபஸ் ​சிர்டோக்ரிஸ்டேட்டஸ்

புதிய  மிகவும் அடையாளம் காணக்கூடிய டைனோசர்களில், வாத்தின் அலகு போன்ற ஒரு நீளமான, குழாய் போன்ற முகடு ஒன்றை காற்றுப்பாதைகளின் உள் வலையமைப்பைக் கொண்டதாக பாராசரோலோபஸ் அதன் தலையில் கொண்டிருந்தது. 77 முதல் 73.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் கனடாவின் ஆல்பர்ட்டா முதல் நியூ மெக்சிகோ வரையிலான இடங்களில் பாராசரோலோபஸின் மூன்று இனங்கள் தற்போது கிடைத்துள்ளன, அங்கீகரிக்கப்பட்டுள்ளன. புதிய மண்டை ஓடு இதற்கு முன்னர் 1923 ஆம் ஆண்டில் நியூ மெக்சிகோவின் அதே பகுதியின் புகழ்பெற்ற புதைபடிவ ஆய்வாளர் சார்லஸ் எச். இரண்டு மாதிரிகள் மற்ற உயிரினங்களை விட குறுகிய, வளைந்த முகடு ஒன்றைக் கண்டுபிடித்தார்.

மணற்கல் சாய்வில் பகுதி மண்டையோடு, துளியூண்டு தாடை மற்றும் சில விலா எலும்புகள்

டென்வர் மியூசியம் ஆஃப் நேச்சர் & சயின்ஸ் குழுவினர் வடமேற்கு நியூ மெக்ஸிகோவின் வறண்ட  நிலத்தை ஆராய்ந்தபோது, ​​பகுதி மண்டை ஓடு 2017 இல் ஸ்மித்சோனியன் சூழலியல் எரின் ஸ்பியர் (Erin Spear) பி.எச்.டி. நியூ மெக்ஸிகோவின் வனப்பகுதியில் ஆழமான செங்குத்தான மணற்கல் சாய்வில் மண்டை ஓட்டின் ஒரு சிறிய பகுதி மட்டுமே தெரிந்தது. செர்டிச் தலைமையிலான அருங்காட்சியக தன்னார்வலர்கள் மணற்கற்களிலிருந்து மாதிரியை கவனமாக வெட்டியதால் அப்படியே முகடு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அந்த இடத்தில் ஏராளமான எலும்புத் துண்டுகள் இருந்தன. ஒரு காலத்தில் பழங்கால மணல்பட்டியில் எலும்புக் கூட்டின் பெரும்பகுதி பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என்று சுட்டிக் காட்டியது, ஆனால், பகுதி மண்டை ஓடு, கீழ் தாடையின் ஒரு பகுதி மற்றும் ஒரு சில விலா எலும்புகள் மட்டுமே அரிப்பிலிருந்து தப்பித்தன.

சுவாசிக்க 8 அடி நீள் குழாயும் வலையமைப்பும்

ஆக்ஸிஜன் அதன் தலையை அடைவதற்கு முன்பு எட்டு அடி நீள  குழாய் வழியாக பாராசரோலோபஸ் சுவாசித்தது என்று வட கரோலினா பல்கலைக்கழக பழங்கால ஆய்வாளர் டெர்ரி கேட்ஸ் தெரிவித்தார். அதன் தலையில் உள்ள வெற்றுக்குழாய் காற்றுப் பாதைகளின் உள் வலையமைப்பைக் கொண்டிருந்தது மற்றும் ஒரு எக்காளம் போல செயல்பட்டது என்றும் கூறினார்.

பாராசரோலோபஸின் மூன்று இனங்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன, நியூ மெக்ஸிகோ, உட்டா (Utah) மற்றும் கனடாவின் ஆல்பர்ட்டாவில் மாதிரிகள் காணப்படுகின்றன. அனைத்தும் சுமார் 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ் காலத்திற்கு முந்தையவை. இந்த பாராசரோலோபாஸ் டைனோசர்,  வட அமெரிக்கா முன்பு, ஆழமற்ற கடலால் பிளவுபட்டிருந்தபோது, வாத்து போன்ற அலகுள்ள டைனோசர்கள், கொம்புகள் கொண்ட டைனோசர்கள் மற்றும் ஆரம்பகால டைனோசர்கள் இந்த நிலத்தில் சுற்றி வந்திருக்கும்.

ஆச்சரியமான பாதுகாப்புடன் மண்டையோடு

புதிய டைனோசரின் புதிய மண்டையோட்டின் பாதுகாப்பு என்பது கண்களைக் கவரும் வசீகரமானது. இது இந்தப் புதிய ஆச்சரியமூட்டும் டைனோசரின் மண்டை மேல் ஓட்டை வடிவமைத்துள்ள எலும்புகளைப் பற்றிய விவரங்களை விரிவாக வெளிப்படுத்தியுள்ளன. இது, டைனோசர் பற்றிய  ஆர்வவெறி மிக்க ஒவ்வொரு குழந்தையும் அறிந்துள்ள உண்மையாகும் என்கிறார் செர்டிச்.

மலையில் உருவாக்கமே டைனோசர் பாதுகாப்பு

மேற்குப் பகுதியில் உள்ள மலையைக் கட்டும் புவிகோளின் மிகச் சிறந்த பாதுகாக்கப்பட்ட மற்றும் தொடர்ச்சியான புதைபடிவங்களில் டைனோசர்களின் மாறுபட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க உதவியது. பாராசரோலோபஸ் கண்டத்தை பல வகையான டைனோசர்களுடன் வாத்து அலகுகள் அல்லது கொம்புகளுடனும், அதே போல் ஆரம்பகால டைனோசர்கள், முதலைகள் மற்றும் ஆமைகளுடன் பகிர்ந்து கொண்டதை அவர்கள் காட்டுகிறார்கள்

75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பராசரோலோபஸ் சிர்டோக்ரிஸ்டேட்டஸ் இப்பகுதியில் வாழ்ந்தபோது, ​​வட அமெரிக்கா ஒரு பரந்த கடல் வழியாக இரண்டு நிலப்பரப்புகளாகப் பிரிக்கப்பட்டது. இன்றைய அலாஸ்காவிலிருந்து மத்திய மெக்ஸிகோ வரை நீட்டிக்கப்பட்ட நிலத்தின் ரிப்பன் துண்டு போன்ற லாரமிடியா, இன்றைய ராக்கி மலைகள் கட்டுமான / உருவானதன் ஆரம்ப கட்டங்களில் மலைக்கட்டுமானங்களின் பல நிலைகளை வழங்குகிறது.

பாராசரோலோபஸ் சிர்டோக்ரிஸ்டேடஸ் பசுமையான, துணை வெப்பமண்டல வெள்ளப்பெருக்குகளை மற்ற, வாத்து அலகு டைனோசர்கள், பலவிதமான கொம்புகள் கொண்ட டைனோசர்கள் மற்றும் ஆரம்பகால டைரனோசோர்களுடன் என பல வளர்ந்து வரும், நவீன முதலைகள், ஆமைகள் மற்றும் தாவரங்களுடன் உள்ளன என்பதைப் பகிர்ந்து கொண்டார்.

முகடுகள்… ஒலி ஒத்ததிர்வு

கடந்த 100 ஆண்டுகளில், மிகைப்படுத்தப்பட்ட குழாய் முகட்டின் நோக்கத்திற்கான யோசனைகள் ஸ்நோர்கெல்கள் முதல் சூப்பர் ஸ்னிஃபர்கள் வரை உள்ளன என்று முதுகெலும்பு பழங்காலவியல் துறை, டெமெர்டி தலைவரும், ராயல் ஒன்டாரியோ அருங்காட்சியக இயற்கை வரலாற்றின் துணைத் தலைவர் டேவிட் எவன்ஸ் குறிப்பிட்டார்.

ஆனால் பல பத்தாண்டுகள் கால ஆய்வுக்குப் பிறகு, இந்த முகடுகள் முதன்மையாக ஒலி ஒத்ததிர்வு மற்றும் காட்சிகளாக தங்கள் சொந்த இனங்களுக்குள் தொடர்புகொள்ளப் பயன்பட்டன என்று நாங்கள் இப்போது நினைக்கிறோம் என்றார். 

நிகழ்கால வினாக்களும் பதிலளிக்கும் பாராசரோலோபஸ் சிர்டோக்ரிஸ்டேட்டஸ் மண்டையோடு

இந்த மாதிரி அதன் பாதுகாப்பில் மிகச் சரியாக உள்ளது என்றும் முகடு எவ்வாறு கட்டப்பட்டது மற்றும் இந்த குறிப்பிட்ட இனத்தின் வாழ்தல் தன்மை பற்றிய நீண்டகால கேள்விகளுக்கு இது பதிலளித்துள்ளது என்றும் கூறிய அவர், என்னைப் பொறுத்தவரை இந்த புதைபடிவம் மிகவும் உற்சாகமானது என்றார் எவன்ஸ். 

செர்டிச் கூறுகையில், “விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்காக எங்கள் பொது நிலங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலுப்படுத்துகிறது” என்று கூறுகிறார்.

[கட்டுரையாளர் – தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்

மேனாள் மாநிலத் தலைவர்]

<!–

–>