அவரவர் ராசிகளுக்குப் பொருத்தமாக ஹேர்ஸ்டைல் செய்து கொண்டால் நல்லதாமே!

நீங்கள் தினமும் பத்திரிகைகளில் ராசிபலன் பார்க்கிறவரா? அப்படியானால் உங்கள் ராசிப்படி எந்த நாளில், எந்த நிறத்தில் ஆடை அணிய வேண்டும் என்றெல்லாம் பார்ப்பவர் எனில் உங்களுக்கு இன்னொரு போனஸ் ஆச்சர்யம் இருக்கிறது எங்களிடம், இனிமேல் நீங்கள் முடி வெட்டிக் கொள்ள சலூனுக்கோ, பார்லருக்கோ செல்வதாக இருந்தால் அதையும் கூட உங்கள் ராசிபலன் படி செய்து கொள்ளலாம் என்பது தான் அது! அட… அவரவர் ராசிக்கு ஏற்றவாறு முடி வெட்டிக் கொள்ள முடியுமா? என்பீர்களானால், அட… ஆமாங்க, உங்கள் ராசிக்கு ஏற்றவாறு அதற்குப் பொருத்தமான வகையில் உங்கள் ஹேர் ஸ்டைல் இருந்தால் தானே அதற்கான பலன்கள் சரியாகக் கிடைக்கக் கூடும். (வாட் ஐ மீன்? நான் சொல்வது இந்த ஜாதகம், ஜோசியமெல்லாம் நம்புகிறவர்களுக்கு மட்டும்) அதன்படி இந்தப் பட்டியலைப் பாருங்கள், இதில் உங்கள் ராசிக்குத் தகுந்த ஹேர்ஸ்டைலை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

முதலில் மேஷ ராசிக்கான ஹேர்ஸ்டைல்…

மேஷம் (Aries)

சாகஸங்களில் ஆர்வமுள்ள மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு நேரான, நீளமான கூந்தல் அமைய வாய்ப்பில்லை, எங்கும், எதிலும், எந்த விஷயத்தையும் சுவாரஸ்யமாகப் பதிவு செய்ய விரும்பும் உங்களுக்கு பறவையின் இறகுகளைப் போன்ற அடுக்கடுக்கான அலைகளாக விரியும் ஹேர்ஸ்டைல் பொருத்தமாக இருக்கும் என்பதோடு உங்கள் ராசிக்கான ஹேர்ஸ்டைலும் இது தான்.

ரிஷபம் – Taurus

பழகுவதற்கு இனிமையான சுபாவம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் எப்போதும் யாரையாவது சார்ந்திருக்க விருப்பமுள்ளவர்களாகவும், பிறருக்கு நம்பகமானவர்களாகவும் இருப்பீர்கள், எனவே உங்களுக்கு உங்கள் ராசிப்படி நீளமான லேயர் கட் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இந்த வகை ஹேர் கட்டில் உங்களது கூந்தல் தேவையற்ற அதிக மாற்றங்களை அடையப்போவதில்லை.

மிதுனம் – Gemini

மிதுனராசிக்காரர்களுக்கு அழகான ஹேர்ஸ்டைல்கள் செய்து கொள்வதென்றால் கொள்ளை இஷ்டம். ஆனாலும் எப்போதுமே தலைமுடியை உயரத் தூக்கிக் கட்டி, பன் கொண்டை இட்டுக் கொள்வதென்றால் எளிதாக உணர்வீர்கள். ஏனென்றால் எங்கு செல்வதற்குத் தயாராவதென்றாலும் உங்களுக்கு அதிக நேரம் செலவளிக்கப் பிடிக்காது. சட்டு புட்டென்று எளிமையான ஹேர் ஸ்டைலில் நச்சென்று தயாராகி வெளியில் செல்வது உங்களுக்குப் பிடிக்கும் என்பதால் முடியை இப்படி சுருள், சுருளாக்கி சுதந்திரமாக விட அனுமதிக்கும் விதமான ஹேர் ஸ்டைல் உங்கள் ராசிக்கு மட்டுமல்ல உங்களது மனதிற்கும் பொருத்தமாக இருக்கும்.

கடகம் – cancer

கடகராசிக்காரர்கள் மிகவும் பொறுமைசாலிகள், வன்முறையில் நம்பிக்கையில்லாதவர்கள். பழகுவதற்கு இதமானவர்கள் என்பதோடு தனிமை விரும்பிகளும் கூட. கடக ராசிக்காரர்கள் கூட்டமாக ஓரிடத்தில் இருந்தார்களெனில் அவர்களை கண்டுபிடிப்பது கூடக் கஷ்டம். அப்படிப்பட்டவர்களுக்குப் பொருத்தமான ஹேர்ஸ்டைல் என்றால் அது ஆழமாக, குட்டையாக வெட்டப்படுவது அல்ல. உங்களது கூந்தல் உங்களுடனும் ஒவ்வொரு நிமிடமும் ரகசியமாகவும், கனவுகளைத் தொட்டெழுப்பக் கூடிய விதத்திலுமாக அலங்கரிக்கப்பட வேண்டும்.

கன்னி- virgo

தங்களது உடைகளாகட்டும், ஹேர் ஸ்டைலாகட்டும் அதிக அக்கறையுடன் பராமரிக்கக் கூடியவர்களான கன்னி ராசிக்காரர்களுக்கு எப்போதும், எதிலும் ஸ்டைலிஷான தோற்றம் வேண்டும் என நினைப்பார்கள். அதோடு அவர்களது கம்பீரத்தை மிளிரச் செய்ய மேலே உள்ள ஹேர்ஸ்டைல் தான் பொருத்தமாக இருக்கும்.

துலாம்- Libra

தங்களது தோற்றப் பொலிவில் கச்சிதமான அழகை விரும்பக் கூடியவர்களான துலாம் ராசிக்காரர்களுக்கு தோள்பட்டையோடு முடிந்து விடக்கூடிய விதத்திலான பாப் கட்டிங் ஹேர்ஸ்டைல் பொருத்தமாக இருக்கும். அந்த முடியைக் கொண்டு அவர்கள் விதம், விதமான ஹேர்ஸ்டைல் செய்து கொள்ளலாம்.

விருச்சிகம் – scorpio

கவர்ந்திழுக்கும் மர்மம் போன்ற குணாதிசயத்துக்குச் சொந்தமான விருச்சிக ராசிக்காரர்களுக்கு டச்சு மணப்பெண் போன்ற இந்த ஹேர்ஸ்டைல் பொருத்தமாக இருக்கும்.

தனுசு- sagittarius

தனுசு ராசிக்காரர்களுக்கு தங்களது கூந்தலை எந்தவிதமான இணைப்புகளையும் கொண்டு கட்டி வைத்துக் கொள்ள பிடிக்காது. அவர்களுக்கு கூந்தல் எப்போதும் சுதந்திரமாக காற்றில் அலையவேண்டும். எனவே மேற்கண்ட ஹேர்ஸ்டைல் அவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

மகரம்- capricorn

தங்களது சோம்பலான இயல்பு மற்றும் மந்தமான செய்கைகளால் அடையாளம் காணப்படும் மகரராசிக்காரர்கள் பொதுவாக சமச்சீரற்ற பாப் கட்டிங் செய்து கொள்ளலாம். ஏனெனில் இந்த ராசிப்பெண்களுக்கு தாடைப்பகுதி கூர்மையாக இருக்கும் பட்சத்திலோ அல்லது ஓவல் ஷேப்பில் முகம் இருந்தாலோ அவர்கள் மீடியம் லெங்த் லேயர் கட் ஹேர் ஸ்டைலைத் தவிர்த்து விடுவது நல்லது.

கும்பம்- aquarius

சுதந்திரமான, எங்கும், எதிலும் பாகுபாடு காணாத மனநிலை கொண்ட கும்பராசிக்காரர்களுக்கு அவர்களுடைய மனதின் இயல்பு தேர்ந்தெடுக்கக் கூடிய ஹேர்ஸ்டைலிலும் கூட பிரதிபலிக்கும். பெளன்ஸிங் ஹேர்ஸ்டைலை விட புதுமையான முறையில் ஹேர்ஸ்டைலிங் செய்யப்பட்டு மிக மெதுவாக அசையும் தன்மை கொண்ட கூந்தல் இவர்களுக்கு மேலும் அழகு சேர்க்கக் கூடும். அத்தைகைய ஹேர்ஸ்டைல் இவர்களுக்குத் தவறாமல் பாராட்டுதல்களையும் பெற்றுத்தரும்.

மீனம் – pisces

மீனராசிக்காரர்களுக்கு தங்கள் கூந்தல் அலங்காரத்தில் பல்வேறு விதமான புதுமைகளைச் செய்து பார்ப்பதில் எப்போதுமே ஆர்வம் அதிகம். பிறர் என்ன நினைப்பார்களோ என்று அவர்கள் எப்போதும் யோசிப்பதே இல்லை. ஹேர் ஸ்டைலைப் பொருத்தவரை தங்களுக்குப் புதுமை எனத் தோன்றும் எல்லாவற்றையும் முயன்று பார்ப்பவர்கள் இவர்கள். பல்வேறு விதமான புதுமையான ஹேர் கட்டுகளை இவர்கள் முயன்றாலும் கூட இவர்களுக்குப் பொருத்தமான ஹேர்ஸ்டைல் என்றால் அது தோள்பட்டை வரை வெட்டப்பட்ட ஹேர்ஸ்டைல் தான்.

மேலே சொல்லப்பட்ட ஹேர்ஸ்டைல்களை அந்தந்த ராசிக்காரர்கள் முயன்று பாருங்கள். தவறாமல் அவற்றால் பலன் கிடைத்ததா? இல்லையா? என்பதையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள் 🙂

<!–

–>