அவருக்கு என் பலவீனமும் எனக்கு அவர் பலமும் தெரியும்: யாரைச் சொல்கிறார் ரோஹித் சர்மா?

 

நியூசி. வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்டுக்கு என்னுடைய பலவீனமும் எனக்கு அவருடைய பலமும் தெரியும் என இந்திய டி20 கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த ஆட்டத்தில் நன்கு விளையாடிய ரோஹித் சர்மா, 48 ரன்களில் டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வெற்றிக்குப் பிறகு ரோஹித் சர்மா கூறியதாவது:

(மும்பை இந்தியன்ஸ் அணியில்) டிரெண்ட் போல்டுக்கு நான் கேப்டனாக இருக்கும்போது பேட்டரை ஏமாற்றும் விதத்தில் பந்துவீசச் சொல்வேன். அதைத்தான் இன்று எனக்கு அவர் செய்துள்ளார். பவுன்சர் வீசுவார் எனத் தெரியும். அதனால் ஃபீல்டருக்குப் பின்னால் பந்தை அடிக்க நினைத்தேன். ஆனால் பந்தில் வேகமில்லாததால் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தேன் என்றார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>