'அவர் ஓரினச் சேர்க்கையாளர்' – விவாகரத்து சர்ச்சை: சமந்தாவுக்கு ஆதரவாக களமிறங்கும் பிரபல நடிகை

காதல் திருமணம் செய்துகொண்ட சமந்தாவும் நாக சைதன்யாவும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். இந்தத் தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இருவரும் பிரிவதற்கு பல காரணங்கள் வதந்திகளாக பரவின. குறிப்பாக உடை வடிவமைப்பாளர் ப்ரீதம் ஜுகல்கருடன் சமந்தா நெருங்கி பழகியதாகவும், அது நாக சைதன்யாவுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து சமந்தா அதற்கு விளக்கம் அளித்தார். 

இதையும் படிக்க | சூர்யாவின் ‘ஜெய் பீம்’ பட டிரெய்லர் குறித்து வெளியான தகவல்

ப்ரீதம் ஜுகல்ரும், ‘சமந்தா எனது சகோதரி போன்றவர்’ என அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர்போன தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இந்த விவகாரத்தில் சமந்தாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். 

அதில், ‘ப்ரீதம் ஜுவல்கர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்’ என்றும், அதனால் அவர்கள் இருவருக்கும் எந்தத் தவறான தொடர்பும் இருக்க வாய்ப்பு இல்லை’ என்றும் தெரிவித்துள்ளார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>