அஸ்வினின் சர்ச்சை பேச்சால் முடிவை மாற்றிக்கொண்ட தயாரிப்பாளர்: ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் டிவி சீரியல்கள், குறும்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அஸ்வின். பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் ஏராளமான பெண் ரசிகைகளின் ஆதரவைப் பெற்றார். இதனையடுத்து அவர் பங்கேற்ற பாடல்கள் யூடியூபில் பெரும் வரவேற்பை பெற்றது. 

திரைப்படங்களில் இதற்கு முன் சிறு வேடங்களில் நடித்து வந்த அஸ்வின், என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்தப் பட இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அஸ்வின், 40 கதைகளைக் கேட்டு தூங்கிவிட்டேன். இயக்குநர் ஹரி சொன்ன கதையில் தூங்க வில்லை. அதனால் இந்தப் படத்தில் நடித்தேன் என்றார். 

இதையும் படிக்க | படப்பிடிப்பில் இருந்து திடீரென காணாமல்போன மீரா மிதுன்: காவல் நிலையத்தில் இயக்குநர் புகார்

மேலும் படம் பிடிக்கவில்லை என்றால் படத்தை வெளியிட விட மாட்டேன் என இயக்குநரிடம் சொன்னேன் என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இயக்குநர்களை அஸ்வின் அவமானப்படுத்தியதாக ஒரு சிலர் குற்றம்சாட்டினர். இதனையடுத்து அஸ்வின் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். 

என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் முதலில் இந்த மாதம் 24 ஆம் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அஸ்வினின் சர்ச்சை பேச்சால் தற்போது வெளியீட்டை அடுத்த ஆண்டு (2022) தள்ளிவைக்க தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>