ஆங்கில நடிகரின் படத்தைத் தவறாக பயன்படுத்தியற்கு மன்னிப்பு கேட்ட மருத்துவமனை

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு தோல் மருத்துவமனையில்  ஆங்கில நடிகர் மோர்கன் ஃப்ரீமேனின் படத்தை பயன்படுத்தியுள்ளது. சரும நிறம் மாறும் என்றும், சரும பிரச்னைகளை சரிசெய்யப்படும் என்ற வாசகத்துடன் அந்த விளம்பரம் அமைந்துள்ளது. 

இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை தரப்பினரை இனவெளியாளர்கள் என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். 

இதையும் படிக்க | ”ஜெய் பீம் படம் பார்த்தேன்…”: பிரபல மலையாள இயக்குநர் விமர்சனம்

இந்த நிலையில் உள்ளூர் விளம்பர வடிவமைப்பாளர் மோர்கன் ஃபிரீமேனின் படத்தைப் பயன்படுத்தியதாகவும், தங்களின் கவனத்துக்கு தாமதமாகவே இது வந்ததாகவும் மருத்துவமனையின் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் மோர்கன் ஃப்ரீமேனின் படத்தை தவறாக பயன்படுத்தியிதற்கு மருத்துவமனை சார்பில் மன்னிப்பும் கேட்கப்பட்டது.  

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>