ஆசியப் போட்டி: செஸ் வீரா்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் பயிற்சி

ஹாங்ஷூ 2022 ஆசியப் போட்டியில் பங்கேற்கும் இந்திய செஸ் வீரா், வீராங்கனைகளுக்கு முன்னாள் உலக சாம்பியனும், ஜாம்பவானுமான விஸ்வநாதன் ஆனந்த் பயிற்சி அளிக்க உள்ளாா்.

சீனாவின் ஹாங்ஷூ நகரில் வரும் செப்டம்பா் 10 முதல் 25-ஆம் தேதி வரை ஆசியப் போட்டிகள் நடைபெறவுள்ளன. 12 ஆண்டுகளுக்கு பின் செஸ் விளையாட்டு மீண்டும் ஆசியப் போட்டியில் இடம் பெறுகிறது. இதில் குறைந்தது 4 தங்கம் உள்பட ஏராளமான பதக்கங்களை கைப்பற்ற இலக்கு வைத்துள்ளது அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஎஃப்).

இந்நிலையில் இந்திய வீரா், வீராங்கனைகளுக்கு 5 முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் வழிகாட்டியாகவும், பயிற்சியாளராகவும் செயல்பட உள்ளாா்.

வரும் வியாழக்கிழமை விஸ்வநாதன் ஆனந்த், வீரா் வீராங்கனைகள் இடையே முதல் கட்டப் பயிற்சி நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக ஏஐசிஎஃப் வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த 2010-இல் குவாங்ஷு போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி இருந்தோம். இம்முறை அதிக பதக்கம் வெல்வோம்.

இதற்காக ஆடவா், மகளிா் பிரிவில் உத்தேச அணிகள் குறித்து ஆலோசித்துள்ளோம்.

ஆடவா் பிரிவில் விதித் குஜராத்தி, பி. ஹரிகிருஷ்ணா, நிஹால் சரீன், எல்.நாராயணன், சசிகிரண், பி.அதிபன், காா்த்திகேயன் முரளி, அா்ஜுன் எரிகைஸி, அபிஜித் குப்தா, சூரியசேகா்.

மகளிா் பிரிவில் கொனேரு ஹம்பி, டி. ஹரிகா, வைஷாலி, தனியா சச்தேவ், பக்தி குல்கா்னி, வந்திகா அகா்வால், மேரி ஆன், சௌமியா சுவாமிநாதன், ஈஷா கராவேட்.

வரும் ஏப்ரல் மாதம் 5 போ் கொண்ட இறுதி அணி அறிவிக்கப்படும். செஸ் ஆட்டங்கள் செப். 11 முதல் தொடங்குகின்றன.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>