ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்ற இந்திய அணி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது இந்திய அணி.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியை இந்திய அணி மூன்று முறை வென்றுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு முதல் முறையாக களம் கண்ட பிரதான போட்டியில் அரையிறுதியில் ஜப்பானிடம் தோற்று ரசிகர்களை ஏமாற்றியது இந்திய அணி. முன்னதாக லீக் ஆட்டத்தின்போது இந்தியாவிடம் கண்ட தோல்விக்கு அரையிறுதியில் பதிலடி கொடுத்தது ஜப்பான். 5-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

வங்கதேச தலைநகா் டாக்காவில் இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது. முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன. பிறகு 2-2 என ஆனது. இதனால் கடைசிக்கட்டம் பரபரப்பானது. இதன்பிறகு இரு கோல்கள் அடித்து இந்திய அணி ஆட்டத்தில் முன்னிலை பெற்றது. பாகிஸ்தான் ஒரு கோலடித்தாலும் இந்திய அணியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. இந்திய அணிக்கு 11 பெனால்டி கார்னர்கள் கிடைத்தும் அவற்றிலிருந்து 2 கோல்கள் மட்டுமே கிடைத்தன. 

கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>