ஆண்களை அவதிப்படுத்தும் விந்து நீர் சுரப்பி வீக்கம்

சுக்கிலச் சுரப்பி அல்லது விந்து நீர் சுரப்பி எனப்படும் பிராஸ்டேட் சுரப்பி ஆண்கள் உடலில்  மட்டுமே அமைந்துள்ள உறுப்பு ஆகும். ஆண்களை ஆண்மையுடையவர்களாக்குவது இந்தச் சிறிய கூம்பு வடிவிலான சுரப்பி தான். சிறுநீர் பையின் அடிப்பாகத்தில் சிறுநீர் புறவழிக் குழாய் [URETHRA] ஆரம்பமாகும் இடத்தில் அமைந்துள்ளது.

இதிலிருந்து மெல்லிய, வெண்ணிற, குழகுழப்பான திரவம் [PROSTATIC FLUID] சுரக்கிறது. இந்த சுக்கிலச் சுரப்பு நீருக்கு இரண்டு முக்கிய பயன்கள் உண்டு.1] உடலுறவின் போது பெண்ணுறுப்பில் உராய்வைத் தவிர்த்து வழவழப்பாக்குவதற்காக உடலுறவிற்குச் சற்று முன்பே இத்திரவம் வெளிவருகிறது. 2] விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்து அணுக்கள்  [SPERM] மேலேறி வந்து இந்தத் திரவத்துடன் கலக்கும். இதனால் உடலுறவிற்குப் பின்னர் விந்தணுக்கள் சுலபமாக நீந்தி பெண்ணின் ஒரு கருமுட்டையை நோக்கி முன்னேறிச் செல்ல முடிகிறது.

குழந்தைப் பருவத்தில் மிகவும் சிறியதாக இருக்கும் இச்சுரப்பி பதின்பருவத்தில் வேகமாக வளர்ச்சியைத் தொடங்குகிறது. 40 அல்லது 45 வயதில் இதன் வளர்ச்சி குறைந்து சீரான வடிவத்தில் இருக்கிறது. சிலருக்கு 50 வயதிற்குப் பின்னர் மேலும் வளர்ந்து பருமனாக மாறுவதில்தான் பிரச்னை ஆரம்பமாகிறது. ஆண்களுக்கு 50 வயதிற்கு மேல் ஹார்மோன்களின் அளவில் ஏற்றத்தாழ்வு நிகழும். இதனால் பிராஸ்டேட் சுரப்பியிலுள்ள இணைப்புத் திசுக்கள் அதிகரித்து விரிவடையும். முதுமையில் டெஸ்டோஸ்டிரான் என்கிற ஆண் ஹார்மோன் அதிகமாக சுரந்து டைஹைட்ரோடெஸ்டரான் அளவு அதிகரிப்பதால் தான் இந்த வீக்கம் ஏற்படுகிறது. இது சுக்கிலச் சுரப்பி வீக்கம் [PROSTATE ENLARGEMENT] எனப்படுகிறது.

இந்தச்  சுக்கில நீர் வீக்கம் சுருக்கமாக ‘BPH’ எனப்படுகிறது. இதற்கு Benign Prostate Hypertrophy  – தீங்கற்ற சுக்கிலச் சுரப்பி வீக்கம் எனப் பொருள். இந்தச் சுரப்பி பெருத்து விரிவடையும் போது சிறுநீர்ப்பையின் கழுத்துப் பகுதி அழுத்தப்படும். நீர்த்தாரை நசுக்கப்பட்டு நீர் வரும் பாதை சுருங்குவதன் காரணமாக சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.

சிறுநீர்ப் பாதை அழுத்தப்பட்டு அடைக்கப்படுவதால் சிறுநீர் தேக்கம் ஏற்பட நேரிடலாம். இத்தேக்கம் தொடருமானால் அழற்சியும், கற்கள் உருவாகும் நிலையும் மேலும் சில பாதிப்புகளும் ஏற்படும். இந்த வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சிலரிடம் இது சுக்கிலச் சுரப்பி புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

விந்துநீர் வீக்கத்தை சில அறிகுறிகள் மூலமாக அறியலாம். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டுதல் ஏற்படும் நிலையே இதன் ஆரம்ப அறிகுறியாகும். இதனால் தூக்கத்தின் இடையிடையே எழவேண்டிய நிலை ஏற்பட்டு தூக்கம் பாதிக்கப்படும். அல்லது தூங்கவே முடியாதளவு போகலாம். கண்விழித்து, கண்விழித்து கழிப்பறைக்குச் சென்றால் சிறுநீர் இயல்பாக வெளியேறாமல் சிரமத்தைக் கொடுக்கும். சிறுநீர் சொட்டுச் சொட்டாக வெளியேறுவதால் எரிச்சலும் வலியும் ஏற்படக்கூடும். [சிலருக்கு இந்த எரிச்சலோ வலியோ இருப்பதில்லை]. சிறுநீரை அடக்க முடியாமல் போவதால் ஆடைகளில் சிறுநீர் கசிந்து பாழ்படுத்தி அவதிக்குள்ளாக நேரிடும். நாளடைவில் பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும். முழுவதுமாக சிறுநீரை வெளியேற்ற முடியமல் கொஞ்சம் சிறுநீர்ப்பையில் தங்கி விடுவதால் பல்வேறு தொற்றுகளும் ஏற்படலாம். தொற்று ஏற்பட்ட பின் அழற்சியும் வலியும் ஏற்படுவது நிச்சயம்.

முதுமையில் ஏற்படும் பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்குப் பயன்படும்.ஹோமியோபதி மருந்துகள்;

பரிடாகார்ப் [ BARYTA CARB ]

கோனியம் [ CONIUM ]

சபல் செருலேட்டா [ SABAL SERULETTA ]

பல்சடில்லா [ PULSATILLA  ]

ஃபெர்ரம் பிக்ரிக்   [ FERRUM PICRIC ]

அயோடியம் [ IODIUM ]

சிலிகா [ SILIA  ]

தூஜா [ THUJA  ]

கல்கேரியா ஃபுளோர் [ CALCAREA FLOUR  ]

சிமாபிலா  [ CHIMAPHILLA ]

ஸ்டாபிசாக்ரியா [ STAPHYSAGRIYA  ]

புருனுஸ் ஸ்பைனோசா [PRUNUS SPINOSA]

மெடோரினம் [ MEDORHINUM ]

விந்துநீர் சுரப்பியோடு தொடர்புள்ள மற்றொரு முக்கிய பிரச்னை விந்துச் சுரப்பி திரவம் தன்னுணர்வின்றி கழிதல் ஆகும். சுக்கிலச் சுரப்பியின் திடீர் வேக்காடு [ ACUTE PROSTATITIS ]  நிலையில் சிலரிடம் சிரமப்பட்டு சிறுநீர் கழிக்கும் போதோ, முக்கி மலம் கழிக்கும் போதோ சுக்கில திரவமும் சேர்ந்து வெளிப்பட்டு விடும். சிலருக்கு மேகவெட்டைக் கழிவுடன் சேர்ந்து இத்திரவமும் வெளிவரக்கூடும்.

நீண்ட, தொடர் சுய இன்பப் பழக்கத்தால் ஏற்பட்ட பலவீனம் அல்லது இளமைக் கால அதிக உடலுறவுச் செயல்களால் விளைந்த பலவீனம் அல்லது சில தொற்று நோய்கள் காரணமாக சுக்கிலச் சுரப்பி வேக்காடு மற்றும் சுக்கில திரவ வெளிப்பாடு ஏற்படுகிறது. இதனால் கஷ்டப்பட்டு சிறுநீர் கழிக்கும் ஒவ்வொரு முறையும் சுக்கில திரவமும் வெளியேறுகிறது. இதனால் இளைஞர்கள் படும் மன அச்சத்துடன் கூடிய அவதியையும் குழப்பதையும் எழுத்தில் வடிப்பது இயலாது. மேற்குறிப்பிட்ட காரணங்களின்றி, வயதானவர்களிடம் பிராஸ்டேட் வீக்கத்தால் மட்டுமே இத்திரவம் வெளியேறுவதுண்டு. இத்திரவம் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் வெளியேறுவதால் மனப்பதற்றமும், உடல் பலவீனமும் ஏற்படுகிறது.

இந்த திரவ வெளிப்பாட்டை முழுமையாய் நலப்படுத்துவதற்கு ஆற்றல்மிக்க பல ஹோமியோபதி மருந்துகள் உள்ளன; அவற்றில் சில முக்கியமான மருந்துகளாவன…

அக்னஸ் காஸ்டஸ் [ AGNUS CASTUS ]

டாமியானா [ DAMIANA ]

லைகோபோடியம்  [LYCOPODIUM ]

பாஸ்போரிக் ஆசிட் [ PHOSPORIC ACID ]

நக்ஸ்வாமிகா [ NUXVOMICA ]

ஏஸ்குலஸ் [ AESCULUS ]

அலுமினா [ ALUMINA ]

அனகார்டியம் [ ANACARDIUM ]

கோனியம் [ CONIUM ]

சல்பர் [ SULPHUR  ]

சபல் செருலேட்டா [ SABAL SERULETTA ]

பல்சடில்லா [ PULSATILLA ]

செலினியம் [ SELENIUM ]

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர் Cell : 94431 45700

Mail : alltmed@gmail.com

<!–

–>