ஆண்கள்… பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? பிக்பாஸ் விவாதத்தின் மீதான தினமணி டீ பிரேக் அரட்டை!

ஆண்கள் பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? பிக் பாஸ் பரபரப்பை ஒட்டி தினமணி டீ பிரேக்கில் ஒரு சின்ன அரட்டை.

பிக்பாஸ் சீசன் 3 ல் கடந்த வாரம் நடிகை மதுமிதா போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டதற்கான காரணம், பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளுடன் ஏற்பட்ட விவாதமே. மதுமிதா, கடந்த வாரத்தில் ஒரு நாள், பிக்பாஸ் வீட்டில் ஆண்கள், பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாகவும், பெண்களை பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்த விவாதத்தில் போட்டியாளர்கள் அனைவரும் மதுமிதாவின் வாதத்தை ஏற்க மறுத்து மதுமிதாவைச் சாடத் தொடங்கவே விவாதம் சண்டையாகி, சண்டை மதுமிதாவின் தற்கொலை முயற்சியில் வந்து முடிந்தது. இத்தனைக்கும் காரணம் ஆண்கள், பெண்கள்… யார், யார் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று தொடங்கிய கருத்து வேறுபாடு தான். அந்தப் பிரச்னை இன்றும் கூட ஓய்ந்தபாடில்லை.

ஆண்களும், பெண்களும் சேர்ந்தியங்க வேண்டிய இந்த சமூகத்தில் ஒருவருக்கொருவர் மற்றவரை இவ்விஷயத்தில் குற்றம் சுமத்திக் கொண்டே இருந்தால் அதற்கு முடிவேது? பிறகு, அப்படியான ஆண்களிடையே பழகும் போது என்ன தான் செய்வது? என்கிறீர்களா?

அதற்கு பதில் கண்டுபிடிக்கும் முகமாகத்தான் உருவானது இந்த வார தினமணி.காம் டீ பிரேக் அரட்டை.

டீ பிரேக் அரட்டை பார்த்து விட்டு உங்களது கருத்துக்களை பகிர மறக்காதீர்கள். ஒருவேளை உங்களுக்கு இதன் மூலமாக ஒரு தீர்வு கிடைக்கலாம்.

<!–

–>