ஆண் குழந்தைக்கு அப்பாவான விஜய் டிவி கதாநாயகன் : ரசிகர்கள் வாழ்த்து – பெயர் என்ன தெரியுமா ?

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தவர் வினோத் பாபு. அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழின் காரணமாக ‘சுந்தரி நீயும், சுந்தரன் நானும்’ என்ற தொடரில் கதாநாயகனாக நடித்தார். 

அந்தத் தொடர் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதனையடுத்து தனது மனைவி சிந்துவுடன் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இருவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் சமீபத்தில் தனது மனைவி சிந்து கர்ப்பமாக இருப்பதாக வினோத் பாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். மேலும் மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். 

இதையும் படிக்க | சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் : தயாரிப்பு நிறுவனம் அதிரடி

இந்த நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை வினோத் பாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அறிவித்துள்ளார். அந்தப் பதிவில் குழந்தை வின்சின் பிறந்துவிட்டான். ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும், மகனும் நலமாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vinoth babu (@vinothbabu_m)

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>