ஆண் குழந்தைக்கு அம்மாவான பாரதி கண்ணம்மா வெண்பா: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து அறிவிப்பு

பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பாவாக எதிர்மறை வேடத்தில் மிரட்டியிருப்பார் ஃபரினா. இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு நடிகை ஃபரினாவின் நடிப்பும் ஒரு காரணம். 

ஃபரினா கர்ப்பமாக இருப்பதால் இந்தத் தொடரில் இருந்து அவர் விலகுவார் என்று தகவல்கள் தெரிவித்தன. ஆனால் அந்தத் தகவலை ஃபரினா மறுத்தார். பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷ்னி சமீபத்தில் விலகி அதிர்ச்சியளித்தார். ஃபரினாவும் விலகி விட்டால் அந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறைந்துவிட வாய்ப்பு இருக்கிறது. 

இதையும் படிக்க | நயன்தாராவுக்கு பதிலாக வேறு நடிகையை ஒப்பந்தம் செய்த படக்குழு: காரணம் என்ன ?

இந்த நிலையில் நடிகை ஃபரினாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனயைடுத்து அவருக்கு பரிபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>