ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடன இயக்குநர் சிவசங்கர்

 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பிரபல நடன இயக்குநராக விளங்குபவர் சிவசங்கர்.  இவர் கரோனா தொற்று ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் அவரது மனைவி மற்றும் மூத்த மகனுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் சிவசங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனையடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

நடன இயக்குநராக மட்டுமல்லாமல் வரலாறு, சர்கார், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் சிவசங்கர் நடித்தும் இருக்கிறார். இவர் நடனம் அமைத்த மன்மத ராசா உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>