'ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6' -இல் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்!

இரு தினங்களுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் ‘ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6’ யை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6-இல் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:

► புதிய ஆப்பிள் வாட்ச் 15 நொடிகளில் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை(SpO2) கணக்கிட்டு தெரிவிக்கும் திறன் கொண்டது. இதற்காக வைக்கப்பட்டுள்ள சென்சார் பச்சை, சிகப்பு மற்றும் இன்ப்ரா ரெட் எல்.இ.டி. கிளஸ்டர்களை பயன்படுத்துகிறது.

► ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலில் எஸ்6 ரக பிராசஸர் உள்ளது. இது முந்தைய சீரிஸில் உள்ள பிராசஸர்களை விட நவீனமானது. இதனால் உடல் செயல்பாடு அளவுகளை மிகவும் துல்லியமாக கணிக்க முடியும். 

► ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே உள்பட பல நவீன அம்சங்கள் கொண்டுள்ளது. 

► ஸ்பேஸ் பிளாக் டைட்டானியம், எல்லோவ் கோல்டு, வாட்ச் புளூ அலுமினியம் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது. 

► 1.5 மணி நேரத்தில் வாட்ச் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும். அதிகபட்சமாக 18 மணி நேரம் வரை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். 32 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. 

► பாராமெட்ரிக் அல்டிமீட்டர் மூலமாக ஜிபிஎஸ் மற்றும் வை – பை நெட்ஒர்க்குகளை அடையாளம் காட்டும். 

► ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் ஆனது ஓ.எஸ். 7 யை கொண்டுள்ளது. 

► இதுதவிர, ஸ்மார்ட் போனுடன் இணைப்பு, அழைப்புகள், குறுஞ்செய்திகள் மேலாண்மை, ரீமைண்டர், உடலியல் செயல்பாடுகளை கணக்கிடல் உள்ளிட்ட வழக்கமான சேவைகளையும் தருகிறது. 

► ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலின் விலை (இந்திய மதிப்பில்)ரூ. 40,000 வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

<!–

–>