'ஆரம்பிக்கலாங்களா?': கமல்ஹாசனின் 'விக்ரம்' பட இசை குறித்து வெளியான தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசனுடன் முதன்முறையாக அனிருத் இந்தியன் 2 படத்துக்காக இணைந்தார். ஆனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு சில கராணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணையும் முதல் படமாக விக்ரம் படம் வெளியாகவுள்ளது. 

இதனால் இந்தப் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் பாடல்களுக்கான உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளது. இதனையடுத்து வருகிற நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாள் என்பதால் விக்ரம் படத்தின் முதல் பாடல் வெளியாகலாம் என்று எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

இதையும் படிக்க | மோகன்லாலின் ‘மரைக்காயர்’ படத்தில் நடிகர் அஜித்?: படக்குழு வெளியிட்ட விடியோவால் ரசிகர்கள் ஆச்சரியம்

விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு சர்கார் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்த கிரிஷ் கங்காதரன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். லோகேஷ் கனகராஜ் அடிப்படையில் ஒரு கமல் ரசிகர். அவர் கமல்ஹாசனை இயக்கி வருவதால் அந்தப் படம் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>