ஆரோக்கியமான  மார்பகங்கள் பெற…

பெண்மையின் முக்கிய அடையாளங்கள் மார்பகங்கள். பெண்மைக்கு அழகு சேர்க்கும் மார்பகங்கள் பெண்கள் அனைவர்க்கும் ஒரே அளவில் அமைவதில்லை. திசுக்கள் (TISSUES), கொழுப்பு (FAT), சுரப்பிகள் (GLANDS), மற்றும் நாளங்களால் (DUCTS) ஆனது மார்பகம். இதன் பருமன், அளவு  போன்றவை பாரம்பரியக் காரணங்களாலும், கொழுப்பின் அளவைப் பொறுத்தும் அமைகின்றன. வடிவம் வயதுக்கேற்பவும், கர்ப்ப காலத்திலும் மாறுபடும். மார்பகங்களின் பிரதான பணிகள் தோற்றப் பொலிவைத் தறுதல்; பாலுணர்ச்சியில் பங்கு வகித்தல்; பால் சுரந்து ஊட்டுதல்.

பெண்களுக்கு  பத்து  வயதளவில்  மார்புக் காம்புகள் சற்று  பருக்கின்றன. சினைப்பைகள்  சுரக்கும்  ஈஸ்ட்ரோஜன்  மற்றும் புரோஜஸ்டிரான்  போன்ற (ஹார்மோன்களால்) இயக்குநீர்களால் மார்பகங்கள்  வளர்ச்சி  பெறுகின்றன.. காம்புகளின்  நுனியில் உணர்ச்சிகளைத்  தூண்டும்  நரம்புகள்  வலை  போல பின்னிக்கிடக்கின்றன. காம்பிலிருந்து உள்நோக்கி பால் நாளங்கள் (MILK DUCTS)செல்கின்றன. இவை சிறு நாளங்களாக பிரிந்து மேலும் பால் உற்பத்தி செய்யும் சிற்றறைகளாக (ALVEOLI) பிரிகின்றன. நாளங்களைச் சுற்றிக் கொழுப்பு படிவதால் மார்பகங்கள் கூம்பு வடிவம் அடைகின்றன. பெண் மலர்ச்சியடைந்த பின் மார்பகங்கள் வேகமாக வளர்ச்சி பெறுகின்றன. சராசரியாக பதினாறு வயதுக்கு மேல் மார்பகங்கள் முதிர்ச்சியும் திண்மையும் பெறுகின்றன.

மார்பகக் காம்பிலிருந்து வரும் திசு நார்களால் மார்பகம் 15 முதல் 25 மடல்களாகப் (ஆரஞ்சுச் சுளைகள் போல) பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மடலிருந்தும் நாள அமைப்பு கருவட்டம் (AREOLA)வரை வந்து காம்பு வரை நீளுகிறது. காம்பின் மேற்பரப்பை அடையுமிடத்தில் ஒவ்வொரு மடல் சார்ந்த ஒரு சிறுநாளம் திறந்து துளையாக இருக்கும். காம்பில் சுமார் 15 முதல் 25 துளைகள் அமைந்திருக்கும். ஒவ்வொரு மடலிலும் 10 முதல் 100 பால் சுரப்பு சிற்றறைகள் இருக்கும்.

மாதவிலக்குக் காலங்களிலும், கர்ப்பகாலத்திலும், பாலூட்டும் காலத்திலும் மார்பகங்களின் அளவு, செயல்பாடு, தன்மைகளில் மாற்றங்களில் நிகழ்கின்றன. பெண்களில் ஒரு பகுதியினருக்கு கடினமடைந்து வீங்கிச் சிவந்து வலி ஏற்படுகின்றது. மாதவிடாய் முற்றிலும் நின்றபின்  MENOPAUSEக்குப் பின் நாளங்கள், சிற்றறைகள் சிறுத்து,கொழுப்பு கரையத் துவங்கும். இதனால் மார்பகங்களின் கவர்ச்சித் தோற்றம் குறைந்து சுருங்கித் தொங்கிய நிலை ஏற்படுகிறது.

மார்பக் கட்டி நோய் உள்ள பெண்களில் ஐந்தில் ஒருவர்க்கு புற்றுக்கட்டி உள்ளது என்று ஆய்வு கூறுகிறது. பெண்கள் சுய பரிசோதனை மூலம் மாதம் ஒரு முறையேனும் மார்பகத்தின் அமைப்பில் மாற்றங்கள் உள்ளனவா எனக் கண்டறிவது நல்லது. ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தை சார்ந்தது மார்பகங்களின் ஆரோக்கியம். ஆரோக்கியமே அழகு, வலிமை தரும். வளமான, நலமான மார்பகங்கள் அமைய பின்வரும் ஹோமியோபதி மருந்துகள் உதவுகின்றன.

பெல்லடோனா : மார்பகம் கனத்தல், கடினமடைதல், சிவந்து உஷ்ணமடைதல்.

பெல்லிஸ் பெரனிஸ் : எப்போதேனும் அடிபட்டு உள்பாதிப்பு.

பிரையோனியா : பால் கட்டுதல் அல்லது வேறு காரணங்களால் மார்பகம் வீங்குதல், கடினமடைதல்.

பைட்டோலக்கா : மாதவிடாய்க்கு முன்பு அல்லது மாதவிடாய் நேரத்தில் கல் போல் கடினத் தன்மையடைதல், கடுமையான வலி, வீக்கம், தொடமுடியாதளவு எரிச்சல் ஏற்படுதல்

சைக்ளமென் : மாதவிடாய்க்குப் பின் வீக்கம் (சில பெண்களிடம் பால் சுரக்கக் கூடும்) பால் நாளங்களில் அலர்ஜி வலி

மார்பகங்களின் வளர்ச்சி, அளவு சம்பந்தமான மருந்துகளும்            பிரச்னைகளும்

சிமாபிலா Q – சிறுத்துவிட்ட மார்பகங்கள் சற்று பெரிதாக மாறவும், பெறுத்துவிட்ட மார்பகஙகள் சற்று பெரியதாக

சபல் செருலேட்டா Q : வளர்ச்சியடையாத  சினைப்பைகள், கருப்பைகள், கர்ப்பபை பலவீனங்கள் மற்றும் தாமதமான மாதவிடாய் காரணமாக மார்பகச் சுரப்பிகள் வளர்ச்சி பெறாமல் வதங்கி இருத்தல் அல்லது மெதுவாக வளருதல்.

லைக்கோபோடியம் 1M : இளம் பெண்களுக்குத் தாமதவிடாயுடன் மார்பக வளர்ச்சி இல்லாமலிருத்தல்.

நக்ஸ்மாஸ் : முன்பு வட்டவடிவில் சதைப்பற்றுடன் அழகாக இருந்த மார்பகங்கள் இப்போது தட்டையாகிச் சிறுத்து விடுதல் – காம்புகள் உள் அமுங்கி இருத்தல்.  

ஒனோஸ்மோடியம் 10M,CM : வளர்ச்சியடையாத கர்ப்பபையுடன் (INFANTILE UTERUS) மார்பகமே வளராமை அல்லது மிகச் சிறியளவில் மார்பக வளர்ச்சி காணப்படுதல் முழுவளர்ச்சி ஏற்படும் வரை மாதம் ஒரு  வேளை).

பிட்யூட்டரி : பருவமடைந்த பிறகும் குறைவான மார்பகவளர்ச்சி.

சபீனா : ஒரு மார்பகம் மட்டும் அளவில் சிறுத்துக் காணப்படுதல்

கோனியம் : மார்பகங்கள் சிறுத்து பை போல் தொங்குதல் (மார்பக வீக்கம், வலி, கடினத்தன்மை, கட்டி போன்ற குறிகளும் இம்மருந்தில் உள்ளன.

சரசபரில்லா Q : காம்பு சிறுத்து தட்டையாகி உள்ளடங்கி இருத்தல் (தினம் இரண்டு சொட்டு இரண்டு வேளை)

பைட்டோலக்கா  : காம்பு உள்ளடங்கி இருத்தல், குழந்தை வாய் வைத்தாலே கடுமையான வலி  உடல் முழுவதும் பரவும்

சிலிகா : பாலூட்டும் போது உடல் முழுவதும் வலி பரவுதல்

குரோட்டன் டிக் : மார்புக் காம்பிலிருந்து  முதுகு வரை நூலால்  கட்டி இழுப்பது போல் பாலூட்டும்  போது வலி ஏற்படும்.

பெல்லாண்டிரியம் : எல்லா நேரத்திலும் மார்பக வலி இருக்கும், பாலூட்டும் போது மட்டும் வலி இருக்காது.

போராக்ஸ் : ஒரு மார்பகத்தில்  பாலூட்டினால் மறுபக்க மார்பகத்தில் வலி வந்து விடும்.

பருவ வயதிலும் தளர்ந்து இருக்கும் மார்பகங்களுக்கு எழுச்சியூட்டும் மருந்துகள் : கோனியம், காலி அயோடு, சபல் செருலேட்டா, பெர்பெரிஸ் அக், அயோடியம்,

மிகவும் பருத்த பெரிய மார்பகங்கள் அளவைக் குறைக்க உதவும் மருந்துகள் : மம்மரி, கல்கேரியா ப்ளோர், சிமாபிலா.

பால் சுரப்புப் பிரச்சனைகளும் ஹோமியோபதி மருத்துவமும்

பருவமடைந்து வயது கடந்தும் சில பெண்களுக்கு மார்பகங்கள் போதுமான தசைப்பிடிப்புடன் வளர்ச்சி பெறாம,சிறுத்து, தட்டையாக இருக்கும்,சிலருக்கு மார்பகம் ஓரளவு கூட எழும்பியிராது (ABSENCE OF BREAST). சிறிய மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு அழகு, கவர்ச்சி குறைந்திருப்பதாக கவலை இருக்கலாம், ஆனால்  உண்மையான பிரச்சனை பால் சுரப்பிகளின் வளர்ச்சிக் குறைபாடு இருக்கும் என்பது தான். இதனால் பிரசவத்திற்குப் பின் பாலூட்டுவதில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. போதிய பால் சுரக்காமல் அமையலாம். எனவே இப்பிரச்சனை உள்ள பெண்களுக்கு பொலிவுடன் எடுப்பான மார்பகங்கள் வளரச் செய்யவும் பால் சுரப்பினை ஊக்குவிக்கவும் ஹோமியோபதி மருந்துகள் பேருதவி புரிகின்றன.

பால் முற்றிலும் சுரக்காமலிருப்பின் சுரக்க வைக்கவும், குறைவாக சுரந்தால் அதிகரிக்கச் செய்யவும், மிகவும் அதிகமாகச் சுரந்தால் சற்று குறைவாக சுரக்கச் செய்யவும் தவிர்க்க முடியாத நிலைமைகளில் பாலை வற்றச் செய்யவும் ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன.

மாதவிலக்கு நேரத்தில், மார்பகத்தில் சில பெண்களுக்கு பால் சுரக்கக்கூடும். பால் உப்பு கரிப்பதால் குழந்தை பால் குடிக்க மறுக்கக்கூடும். சில சமயம் பாலுடன் ரத்தம் கலந்து வரக்கூடும். இது போன்ற மார்பகம் சம்பந்தப்பட்ட அனைத்து உபாதைகளுக்கும் அருமையான மருந்துகள் ஹோமியோபதியில் உள்ளன.

பால்சுரப்புப் பிரச்சனைகள் தீர்க்கும் சில மருந்துகள்;

(கன்னிப்பருவத்தில் சுய இன்பத்தில் மூழ்கித்திளைத்த பெண்கள்) பிரசவமாகி சில நாட்களாக பால் சுரக்காமல் இருத்தல் – அக்னஸ் காஸ்டஸ்

பால் சுரந்துகொண்டிருக்கும் போதே திடீரென நின்று விடுதல் – அசபோடிடா

பயம், அதிர்ச்சியில் பால் சுரப்பு தடைபடுதல் – அகோனைட்

அதிக கோபத்தால் சுரப்பு நின்றால் – சாமோமில்லா

MILK FEVER காய்ச்சலோடு மார்பகங்கள் சிவந்து வீங்கிப் பால் சுரக்காதிருத்தல் – பெல்லடோனா

தாய் பால் உப்பு கரிப்பதால் குழந்தை பாலருந்த மறுத்தல் – கல்கேரியா பாஸ்

தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் தாய்ப்பால் சுரப்பை வற்றச் செய்ய பயன்படும் மருந்து – லாக்கனினம்.

மணமாகாத இளம்பெண்களுக்கு (எப்போதும் கருவுற்றிராத நிலையிலும்) மார்புகள் வீங்கிப் பால் வருதல் – அஸபோடிடா

சிறுமிகளின் மார்பகங்களில் பால் சுரத்தல், புண் போன்ற வலி – பல்சடில்லா

பொதுவாக பால் சுரப்பை அதிகரிக்கப் பயன்படும் மருந்துகள் –  கல்கேரியா பாஸ், லாக்டுசாவிரோசா, சபல்செருலேட்டா, ஸ்டிக்டா, லெசிதின், ரிஸினஸ் கம்யூனிஸ், பல்சடில்லா, கல்கேரியா கார்ப், பெல்லாடியம்,  அசபோடிடா, ஆல்பால்பா

பால் அளவை நிறுத்த   உதவும் மருந்து – சியோனாந்தஸ்

Dr.S.வெங்கடாசலம்,
மாற்றுமருத்துவ நிபுணர்,
சாத்தூர்.
செல்;94431 45700   
Mail: alltmed@gmail.com

<!–

–>