'ஆர்ஆர்ஆர்'-ஐத் தொடர்ந்து மற்றொரு பெரிய படத்தின் வெளியீடும் தள்ளிவைப்பு : காரணம் என்ன ?

கரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக பெரிய பொருட் செலவில் உருவான படங்கள் வெளியாவதில் சிக்கல் உருவாகியுள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக செலவு செய்த தொகை வீணானது. 

இதையும் படிக்க | அஜித் பட நடிகருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

இதனைப் போல மற்றொரு பெரிய படமான பிரபாஸின் ராதே ஸ்யாம் படத்தின் வெளியீடும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வலிமை படம் தனியாக வெளியாகவுள்ளது. மேலும் நடிகர் விஷால் தனது வீரமே வாகை சூடும் படத்தை பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>