'ஆர்ஆர்ஆர்’ டிரைலர் புதிய சாதனை

‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் டிரைலர் யூடியூபில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆர்ஆர்ஆர். பாகுபலி படத்துக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

இதையும் படிக்க | மீண்டும் இணையும் இயக்குநர்கள் அமீர் – வெற்றிமாறன்: அதிகாரப்பூர்வ தகவல்

முன்பு கரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் வெளியீடு திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

பின் இறுதியாக படக்குழு ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வரும் மார்ச்-25 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக  அறிவித்தது.

இந்நிலையில், யூடியூப் தளத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகும் ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி டிரைலர்களின் மொத்த பார்வைகள்  15 கோடியைத்(150 மில்லியன்) தாண்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>