ஆர்ஆர்ஆர் படத்தால் ரிலீஸைத் தள்ளி வைத்த 3 பெரிய படங்கள்: நன்றி சொன்ன ராஜமௌலி!

ஆர்ஆர்ஆர் படத்தால் புத்தாண்டு, பொங்கலுக்கு வெளியாகவிருந்த மூன்று பெரிய படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை ஒத்திவைத்துள்ளன. இதனால் நெகிழ்ச்சியடைந்த இயக்குநர் ராஜமெளலி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பாகுபலிக்கு பிறகு ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். 

இந்தப் படம் வருகிற ஜனவரி 7-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருந்த பவன் கல்யாணின் பீம்லா நாயக், வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜின் எஃப்3, மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்கள் தங்கள் பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளன.

படிக்கமாநாடு பட வெற்றி விழா: நடிகர் சிம்புவை விமர்சித்த எஸ்.ஏ.சந்திரசேகர்

இதற்கு இயக்குநர் ராஜமெளலி சுட்டுரையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, சர்காரு வாரி பாட்டா படம் பொங்கல் ரிலீஸுக்கு ஏற்றப் படம் என்றாலும், மகேஷ் பாபு அதனை கோடை விடுமுறைக்குத் தள்ளிவைத்துள்ளார். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள எஃப்3 படத்தை ஒத்திவைத்தமைக்கும் நன்றி. 

மேலும், பீம்லா நாயக் படத்தின் வெளியீட்டையும் வேறு தேதிக்கு தள்ளிவைத்த பவன் கல்யாணின் முடிவு பாராட்டத்தக்கது. அந்த படம் வெற்றி பெற படக்குழுவுக்கு வாழ்த்துகள் என்று சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>