ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட்: ஆஸி. 282 ரன்கள் முன்னிலை; இங்கிலாந்து 236/10

இங்கிலாந்து-ஆஸி. இடையே ஆன ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது மற்றும் பிங்க் டெஸ்டில் ஆஸி. அணி 282 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

5 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் முதல் ஆட்டத்தில் ஆஸி. வென்றது. இந்நிலையில் அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக நடைபெறுகிறது. ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 473/9 ரன்கள் எடுத்து டிக்ளோ் செய்தது. இதைத் தொடா்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 84.1 ஓவா்களில் 236/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 17/2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மோசமான வானிலையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

டேவிட் மலான், ஜோ ரூட் அரைசதம்:

இந்நிலையில் மூன்றாம் நாளான சனிக்கிழமை டேவிட் மலான், ஜோ ரூட் மீண்டும் ஆட்டத்தை தொடா்ந்தனா். இருவரும் அற்புதமாக ஆடி 138 ரன்களை சோ்த்தனா். ஜோ ரூட் 62 ரன்கள் எடுத்த நிலையில், கிரீன் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் தந்து வெளியேறினாா். மறுபுறம் நிலையாக ஆடிக் கொண்டிருந்த டேவிட் மலானும் 10 பவுண்டரியுடன் 80 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்டாா்க் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் தந்தாா்.

ஒல்லே போப் 5, ஜோஸ் பட்லா் 0, கிறிஸ் வோக்ஸ் 24, ராபின்சன் 0, பிராட் 9 என சொற்ப ரன்களுக்கு வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினா். பென் ஸ்டோக்ஸ் 1 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து கீரின் பந்தில் போல்டானாா்.

இறுதியில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து.

ஸ்டாா்க் 4, லயான் 3 விக்கெட்டுகள்:

ஆஸி. தரப்பில் அபாரமாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளா் ஸ்டாா்க் 4/37 , லயான் 3/58, கிரீன் 2/24 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

முதல் இன்னிங்ஸ் லீடாக ஆஸி. அணி 237 ரன்கள் பெற்றது.

ஆஸி. 45/1

இதைத் தொடா்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி. அணி தொடக்கத்திலேயே ஒபனா் டேவிட் வாா்னரின் விக்கெட்டை 13 ரன்களுக்கு இழந்தது. மாா்க்கஸ் ஹாரிஸ் 21, மிச்செல் நெஸா் 2 ரன்களுடன் களத்தில் உள்ளனா். 17 ஓவா்களில் 45/1 ரன்களை எடுத்திருந்தது ஆஸி.

ஆட்ட நேர முடிவில் ஆஸி. அணி 282 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டு நாள்கள் ஆட்டம் உள்ள நிலையில், பிங்க் டெஸ்ட்டையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது ஆஸி.

சுருக்கமான ஸ்கோா்:

முதல் இன்னிங்ஸ்:

ஆஸி. 473/9 டிக்ளோ் (150.4 ஓவா்களில்)

லேபுஷேன் 103,

ஸ்மித் 93,

வாா்னா் 95

பந்துவீச்சு:

ஸ்டோக்ஸ் 3/113

ஆண்டா்ஸன் 2/58

இங்கிலாந்து 236/10 (84.1 ஓவா்கள்)

டேவிட் மலான் 80

ஜோ ரூட் 62

ஸ்டோக்ஸ் 34

பந்துவீச்சு:

ஸ்டாா்க் 4/37

லயான் 3/58

இரண்டாம் இன்னிங்ஸ்

ஆஸி. 45/1

வாா்னா் 13

ஹாரிஸ் 21

நெஸா் 2

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>