ஆஷஸ் டெஸ்ட்: 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி நிதான ஆட்டம்

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடி  ரன்களை சேர்த்து வருகிறது.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான முதல் ஆஷஸ் டெஸ்ட் பிரிஸ்பனில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் நாள் பேட்டிங்கை தொடர்ந்த இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய ஆஸி,. அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்களை எடுத்திருந்தது.

இந்நிலையில் 3-வது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸி,. அணி இங்கிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 104 ஓவர்களுக்கு 425 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. அணியில் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 152 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் மார்க் உட் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

278 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 220 ரன்கள் எடுத்திருக்கிறது.

நிதானமாக விளையாடிய  டேவிட் மலன் 80 ரன்களும் , ஜோ ரூட் 86 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள். ஆஸி., தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பட் கம்னிஸ் இருவரும் 2 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார்கள். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>