ஆஷஸ் டெஸ்ட்: 4 ’நோ பால்கள்’, கண்டுகொள்ளாத நடுவர்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 4 ‘நோ பால்களை’ நடுவர் காணாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிக்க | ஆஷஸ் டெஸ்ட்: 85 ஆண்டுகள் கழித்து சாதனை, மிட்சல் ஸ்டார்க் அசத்தல்

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான முதல் ஆஷஸ் டெஸ்ட் பிரிஸ்பனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் பேட்டிங்கை தொடர்ந்த இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய ஆஸி,. அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்களை எடுத்திருக்கிறது. 

மேலும் , இன்றைய ஆட்டத்தில் ஆஸி,. பேட்ஸ்மேன் வார்னர் ஆட்டமிழந்தபோது 3-வது நடுவரால் பந்துவீச்சு கவனிக்கப்பட்டது. இதில் பந்து வீசிய பென் ஸ்டோக்ஸ் கோட்டைத் தாண்டி காலை வைத்து ‘நோ பால்’ வீசியது உறுதியானது. இருப்பினும் வார்னர் ஆட்டமிழந்ததாக அறிவித்தனர்.

பின் , அதற்கு முன் வீசிய பந்துகளை பார்த்த போது தொடர்ந்து ஸ்டோக்ஸ் 4 ‘நோ பால்’களை வீசியது தெரியவந்தது.

இதனால் , 4 ’நோ பால்களை’  ஒருமுறை கூட நடுவர்  கவனிக்காதது ஆஸி,. ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>