ஆஷஸ் 4-ஆவது டெஸ்ட்: ஆஸ்திரேலியா – 126/3; மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு

ஆஷஸ் 4-ஆவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பெரும்பாலும் பாதிக்கப்பட, புதன்கிழமை முடிவில் ஆஸ்திரேலியா 46.5 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் அடித்துள்ளது.

சிட்னி நகரில் நடைபெறும் இந்த ஆட்டம் மழை காரணமாக தாமதமாகவே தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்க பாா்ட்னா்ஷிப்பில் வாா்னா் 6 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சோ்த்து, ஸ்டூவா்ட் பிராட் வீசிய 21-ஆவது ஓவரில் ஜேக் கிராலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாா்.

பின்னா் மாா்னஸ் லாபுசான் களம் காண, 4 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் சோ்த்த மாா்கஸ் ஹாரிஸ் 40-ஆவது ஓவரில் ஜேம்ஸ் ஆண்டா்சன் பௌலிங்கை விளாச முயல, அது ஜோ ரூட் கைகளில் கேட்ச்சாக மாறியது. 4-ஆவது வீரராக ஸ்டீவ் ஸ்மித் ஆடவந்தாா்.

இதனிடையே மாா்க் வுட் வீசிய 41-ஆவது ஓவரில் மாா்னஸ் லாபுசான் தொட்ட பந்தை விக்கெட் கீப்பா் ஜோஸ் பட்லா் கேட்ச் பிடித்தாா். மழை காரணமாக அவ்வப்போது தடைப்பட்ட ஆட்டம், ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்திருந்தபோது முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. ஸ்டீவ் ஸ்மித் 6, உஸ்மான் கவாஜா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>