ஆஷஸ் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகள் அறிவிப்பு

 

ஆஷஸ் தொடரில் 4-வது டெஸ்டில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று 3-0 என்கிற முன்னிலையுடன் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 

4-வது டெஸ்ட் சிட்னியில் நாளை நடைபெறுகிறது. இந்த டெஸ்டில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், உஸ்மான் கவாஜா, கேம்ரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்.

இங்கிலாந்து அணி:

ஹசீப் ஹமீது, ஸாக் கிராவ்லி, டேவிட் மலான், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், மார்க் வுட், ஜேக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>