ஆஸ்கர் விருது போட்டியில் இருந்து வெளியேறியது ‘கூழாங்கல்’

ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்ற ‘கூழாங்கல்’ திரைப்படம் தகுதிச் சுற்றோடு  வெளியேறியது.

பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூழாங்கல் திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ரௌடி பிக்சர்ஸ் சார்பாக வெளியிடுகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை குவித்து வந்தது. இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்களுக்கான வெளிநாட்டு படங்கள் பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படம் தகுதிச் சுற்றுடன் விருதுப் பட்டியலில் இருந்து வெளியேறியிருக்கிறது.

இதையும் படிக்க | ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>