ஆஸ்திரேலிய ஓபன்: ஆஷ் பார்ட்டி சாம்பியன்

 

ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ் பார்ட்டி சாம்பியன் ஆகியுள்ளார்.

மெல்போர்னில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் நெ.1 வீராங்கனையான ஆஷ் பார்ட்டியும் அமெரிக்காவின் காலின்ஸும் மோதினார்கள். இதற்கு முன்பு இருவரும் மோதிய 4 ஆட்டங்களில் 3-ல் ஆஷ் பார்ட்டி வெற்றி பெற்றிருந்தார். ஆஷ் பார்ட்டி இந்த வருட ஆஸி. ஓபன் போட்டியில் ஒரு செட்டும் இழக்காமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதால் அவருடைய வெற்றி பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. 

6-3 என முதல் செட்டை வென்றார் ஆஷ் பார்ட்டி. ஆனால் 2-வது செட்டில் 5-1 என முன்னிலை பெற்றார் காலின்ஸ். எனினும் இதற்குப் பிறகு போராடி 6-6 எனக் கொண்டு வந்தார் ஆஷ் பார்ட்டி. டை பிரேக்கரை 7-2 எனக் கைப்பற்றினார். இதனால் 6-3, 7-6 என நேர் செட்களில் காலின்ஸைத் தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் பட்டத்தை வென்றார் ஆஷ் பார்ட்டி. 

காலின்ஸ்

இதன்மூலம் 44 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை வென்ற ஆஸ்திரேலியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.  இதற்கு முன்பு 1978-ல் கிறிஸ் ஓ நீல் வெற்றி பெற்றிருந்தார். பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓபன் என மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை ஆஷ் பார்ட்டி இதுவரை வென்றுள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>