ஆ‌ற்​ற‌‌ல் பாது​கா‌ப்பு அவ​சி​ய‌ம்!

பெருகி வரும் மக்கள்தொகைக்கும், அதன் விளைவாக எழும் பல்வேறு வாழ்வாதார பிரச்னைகளுக்கும் அடிப்படைத் தீர்வு ஆற்றல் சிக்கனம் ஒன்றே எனலாம். வீடு, அலுவலகம், கல்விக்கூடம், தொழிற்சாலை, அங்காடி என எங்கும் ஆளற்ற அறைகளில் ஓடும் மின்விளக்குகள், மின்விசிறிகள், கழிவறைக் காற்றை வெளியேற்றும் மின்  உபகரணங்கள், குளியலறையின் நீர் சூடாகும் மின்வெப்பமாக்கி போன்றவற்றைத் தேவையில்லாமல் இயக்கக்கூடாது. 

நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகியவை மட்டுமின்றி, வானமும் ஆற்றலின் மூலதனம் ஆகிறது. இந்த மண்ணில் இருந்து உயிரினங்களுக்குப் போதிய உணவு ஆதாரம் கிடைக்க வேண்டும். நாம் பயிர் வளர்க்கவும், உயிர் வளர்க்கவும் தண்ணீர் வேண்டும். உணவு உண்ட மக்கள் உடல் நலத்துடன் கல்வியும், தொழில் திறமையும் பெற்றால்தானே நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை தரும் பொருளாதாரமும் மதிப்பும் உண்டாகும்? 

ஆனால், இத்தனைக்கும் தேவை ஆற்றல் தரும் மின்சாரம். மனிதனின் கண்டுபிடிப்புகளில் மின்சாரம் முதன்மையானது. இன்றைக்கு 190 ஆண்டுகளுக்கு முன்னர் (1832) மைக்கேல் ஃபாரடே  என்னும் ஆங்கில அறிஞர், இங்கிலாந்தின் லண்டன் “ராயல் கழக’த்தில் அறிவியலாளர் மத்தியில் முதன்முறையாக மின்னாக்கியின் தத்துவத்தை விளக்கினார். சிறு பரிசோதனையாகச் செய்தும் காட்டினார். ஒரு சிறிய காகிதக் குழலின்மேல் செப்புக் கம்பியைச் சுற்றி, அதனுள் ஒரு காந்தத் தண்டினை நுழைத்தபோது, கம்பியில் மின்னோட்டம் தூண்டப்படுவதை விளக்கினார். 

அப்போது அங்கிருந்த மூதாட்டி ஒருவர், “இதனால் மக்களுக்கு என்ன பயன்’ என்று கேலியாகக் கேட்டார். அன்றைய அதிபர் கிளாட்ஸ்டன் உட்பட பலரும் பாரடேயை கேலி செய்தார்கள். ஃபாரடே, அவர்களிடம் “பிறந்த குழந்தையின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்’ என்று கூறினார். அவருடைய வாக்கு அட்சர லட்சம் பெறும். “அரசுகள் பிற்காலத்தில் இதற்கு வரி வசூலித்து வருமானம் பெருக்கும் என்று அவர் கூறியதுதான் நடந்தது. அறிவியல்வாதிகளின் தீர்க்கதரிசனம் அது.
காந்தம்}இயக்கம்}மின்சாரம் ஆகிய இந்த மூன்றின் கூட்டணி இல்லாமல் இனி எந்தச் சக்தியாலும் உலகினை ஆட்சி செய்ய முடியாது. உள்கட்டமைப்பின் உயிரான மின்சாரம் இல்லை என்றால் உலகில் “மின்தாக்கு’ அடிக்கும்.
மின்சாரம் இன்றி உலகில் உயிர்வாழ்க்கை சாத்தியம் இல்லை. மின்னணு இல்லாமல் உலகில் எந்த அணுவும் இனி அசையாது என்கிற கட்டாயம் வந்து விட்டது. அதனால்தான் எந்தவொரு தொழில்நுட்பத்தையும் அது, கருப்பிடிக்கும்போதே துருப்பிடிக்க விடக்கூடாது என்கிறோம்.
இன்றைக்கு உடலுக்குள் கூட மின்னாற்றல் உற்பத்தி செய்யலாம். உடலில் இயக்கம் (அதாவது அசைவு) இருக்கும் இடமெல்லாம் மின்சாரம் கிடைக்கும். மார்புத்துடிப்பு, இதயத்துடிப்பு போன்ற ஏற்ற இறக்க அசைவுகளை மின்னழுத்த மாற்றி (பீஸோ – எலெக்ட்ரிக்) முறையில்  உடலுக்குள் மின்சாரம் உண்டாக்கலாம். 

அது மட்டுமின்றி, உடல் உறுப்புகளில் அனைத்தும் ஒரே வெப்பநிலையில் செயல்படுவது இல்லை. கூடுதலாக வியர்வை வருவது என்பதே உடலைக் குளிர்விக்கும் இயல்பான செயல்நுட்பம்தானே. உடலில் வெப்ப மாறுபாடுகள் உள்ள உறுப்புகளும் உள்ளன. இந்த வெப்ப வித்தியாசத்தைப் பயன்படுத்தி, வெப்பமின்மாற்றி (தெர்மோ எலெக்ட்ரிக்) முறையில் உடலுக்குள் மின்னாற்றல் தயாரிக்கலாம். கழுத்து, உள்ளங்கை போன்ற இடங்களில் வெளியேறும் நுண் வெப்பத்தால் உடல் கருவிகளை இயக்கலாம்.

இதனால் உடம்புக்குள் இதயத் துடிப்புச் சீராக்கி (பேஸ்மேக்கர்) பொருத்திய நோயாளிகளுக்கு அதனுள் பொருத்தப்பட்ட மின்கலன்களை அறுவைசிகிச்சையால் கால இடைவெளியில் அடிக்கடி எடுத்து மாற்ற வேண்டியதுமில்லை. உடலுக்குள்ளேயே எரிமின்கலன்  உருவாக்கலாம். குளுக்கோஸ் மாவுச்சத்து எரித்துப் பெறப்படும் உள்வெப்ப ஆற்றல் உதவும்.
நிலம் தந்த பிச்சையாகப் புவிமடியில் புதைந்து கிடந்த எண்ணெய், எரிவாயுக்கள், நிலக்கரி ஆகியவற்றின் கையிருப்புகள் அதிவேகத்தில் குறைந்தும் வருகின்றன. இவற்றை எரித்துப் பெறும் ஆற்றலுடன் வெளிப்படும் கழிவு வாயுக்களால் காற்றுமண்டலம் சூடேறி வருகிறது என்னவோ உண்மை. 
தொழிற்சாலைகள் வெளியேற்றும் ஹைட்ரோகுளோரிக் அமில வளிமம், கந்தக அமில  வளிமம், சாண வாயு ஆகிய மீத்தேன் தவிர, நவீன காலத்தில் மனிதர்கள் கண்டுபிடித்துள்ள குளிர்பதனப் பெட்டிகள், அறைகள், திரையரங்குகள், கல்யாண மண்டபங்கள் போன்றவை  உமிழும் குளோரோ}ஃபுளோரோ கார்பன் அளவு சொல்லி மாளாது. இதனால் ஓúஸôன் உற்பத்தி தடைபடுவதால் புவியின் பாதுகாப்புக் கவசத்தில் விழுந்த ஓட்டைகள் எண்ணிக்கை கூடுதலாகிவிடும். 

இந்த இடைக்காலத்தில் அணுமின்னாற்றல் இன்னொரு அலர்ஜி. அடுப்படி உணவு சுவையாக இருந்தாலும், சமையல் கழிவுகளைப் பத்திரமாகக் கையாள வேண்டும் அல்லவா? எப்படியோ, ஹைட்ரோகார்பன்களை எரித்துப் பெறும் வெப்ப ஆற்றலால் இயக்கசக்தி பெறுவது இருக்கட்டும். 
மின்கலனில் இயங்கும் வாகனங்கள் இப்போதைக்குத் தொடங்கட்டும். 
எதிர்காலத்தில் “நானோ தொழில் நுட்ப’த்தில் நுண் ஹைட்ரஜனால் வண்டி ஓட்டலாம். இன்றைக்கு ஏவூர்திகளில் (ராக்கெட்) கையாளப்படும் “கிரையோஜெனிக்’ எனப்படும் அதிகுளிர் வாயுக்களில் ஒன்றான ஹைட்ரஜன்தான் அது.
 இந்த வாயுவைக் காற்றில் இருந்து பிரித்தெடுக்கலாம். ஹைட்ரஜனை எரித்தால் நீராவிதான் வெளிப்படும். சுற்றுச்சூழல் மாசுபடாது. அதுவே சிறந்த எரிமின்கலமும் ஆகும். இதனைப் பிளாட்டினம், பல்லாடியம் போன்ற உலோகங்களின் படிக இடைவெளிக்குள் அழுத்தமுடன் சேமித்து  வைக்கலாம். கைப்பேசியில் “சிம்’ கார்டு போடுவதைப் போல, வாகனம் ஓட்டும் முன் அதற்குரிய செருகுபேழைக்குள் உலோகத் தகட்டினை நுழைத்துச் சூடாக்கினால் ஹைட்ரஜன் வாயு வெளிப்படும். அதனை எரித்தால் வண்டி ஓடும்.
இதற்கிடையில் அதி உயர மலைமேட்டில் தேக்கிவைத்த தண்ணீரின் இயக்க ஆற்றலால் சுழலிகளை இயக்கியும் மின்னாற்றல் தயாரிக்கக் கற்றுக் கொண்டோம். இயற்கையில் வீசும் காற்றில் இருந்தும் காற்றாலை மின்சாரம் பெறுகிறோம்.

தொழில்நுட்ப வரலாற்றைப் பொறுத்தவரை, மனிதர்களின்  இடப்பெயர்வுகளும், சரக்குப் போக்குவரத்துகளும், நகர்வுகளும் எல்லாம்  செயற்கையான சக்கர வண்டிகளால் புதுப்பரிமாணம் கண்டன. 1765}இல் நிகழ்ந்த முதலாவது தொழிற்புரட்சியினால் உலகம் இயந்திரமயம் ஆனது.
மின்னோட்டம் பாயும் செம்புக் கம்பிச் சுருளுக்குள் வைத்த காந்தம் முன்}பின்னாக நகரும். இது இயந்திரத்தின் இயக்கம்.
இரண்டாவது தொழிற்புரட்சியில் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதால், நீராவி இயந்திரப் பொறிகள் கட்டமைக்கப்பட்டன. கம்பி வழி தொலைபேசி, தந்திமுறை, தகவல் தொடர்பு மற்றும் கண்ணுக்குத் தெரியாத மின்காந்த அலைகள் வழி வானொலி, தொலைக்காட்சி போன்ற தகவல் பரப்பு சாதனங்கள் என எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன. 
இருபதாம் நூற்றாண்டில் மூன்றாவது தொழிற்புரட்சியால் அணுஆற்றல், விண்வெளித் தொழில்நுட்பம், கணிப்பொறி வளர்ச்சி, உயிரித்தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம் என்று பல நவீன 
தொழில்நுட்பங்களுடன் உலக நாடுகள் போட்டிபோட்டுக் கொண்டு முன்னேறி வருகின்றன.

அனைவருமே தங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும், மதிப்பையும் தக்க வைத்துக்கொள்ள அறிமுகமான தொழில்நுட்பப் புரட்சியில் புதிய ஆற்றல் மூலத்தைத் தேடி அலைகிறோம். மனித வரலாற்றிலும், வெப்பம்தான் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஆற்றல் மூலம். தாவரம், விலங்குசார் உணவைப் பச்சையாக உண்டுவந்த மனிதன், தீ கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, உணவை வேகவைத்து உண்ணத் தொடங்கினான். 

நம் நாட்டில் ஆதிகுடிகள் இறந்தோரை சிதை மூட்டி எரித்து வந்தனர். அதனால் அந்த நெருப்பே காற்றாகி, வானில் சூரியனாக, சந்திரனாக, நட்சத்திரங்களாக ஒளிர்கின்றன என்றும் கருதினர். “ஞாயிறு போற்றுதும்’, “திங்கள் போற்றுதும்’ என்று சூரிய, சந்திரர்களை இயற்கைத் தெய்வங்களாக வணங்கினர். 
திருவள்ளுவரும் “வானுறையும் தெய்வங்கள்’ ஆகிய மூதாதையர் பற்றிக் குறிப்பிடுகிறார். அவர்களின்  தீ வழிபாடு- தைவ (தெய்வ) வழிபாடு ஆயிற்று. சிவ}சைவ என்றும், விஷ்ணு – வைஷ்ணவ என்று உரிச்சொற்களாதல்  போன்ற மொழியியல் உருமாற்றம் இது.  

பூமிக்கு வெளியில் இருந்து வரும் ஒரே ஆற்றல் சூரிய ஒளியும் கதிர்வீச்சுக்களும் மட்டும் தான். ஏனைய அனல் – புனல் வெப்ப மின்சாரங்கள் பூமியில் கிடைக்கும் பொருள்களில் இருந்து பெறப்படுபவை. 
இப்போதைக்கு நம் அனைவருக்கும் சங்கப்பலகை, சூரிய மின்பலகைகள்தாம். இவை சூரிய ஒளியினை ஏற்று, கம்பியில் நேர்த்திசை மின்சாரத்தைச் செலுத்தும். அதனையே நேர்மின்மாற்றி (இன்வெர்டர்) உதவியால் மாறுதிசை மின்னோட்டம் ஆக்கி நாம் பயன்படுத்தலாம்.

தாவரம்தான் பசுமை உணவகம். அது, காற்றின் தீங்கான கரியமில வாயு, நிலத்தின் தண்ணீர், தன்னிடமுள்ள குளோரோஃபில் ஆகிய பச்சையம் ஆகியவற்றைச் சூரிய ஒளியில் கார்போஹைட்ரேட் என்ற உணவு தயாரித்து வழங்குகிறது.

இனி, ஆதிமூலமான சூரிய பகவான் முதற்றே உலகு என்பதால், தோட்டவெளிகளில் சூரிய மின்பலகைகளைச் செயற்கை இலைகளாக்கி  மரங்கள் நடுவோம். வீட்டுக் கூரைகளில் அவற்றையே ஓடுகளாகவும் பதிப்போம். ஆற்றலைப் பாதுகாப்போம்.
இன்று (டிச. 14) 
தேசிய ஆற்றல் பாதுகாப்பு நாள். 

கட்டுரையாளர்: இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>