இங்கிலாந்து பதிலடி: இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா திணறல்

ஆஸ்திரேலியாவுடனான 4-வது ஆஷஸ் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான 4-வது ஆஷஸ் டெஸ்ட் ஆட்டம் சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து ஜானி பேர்ஸ்டோவின் சிறப்பான சதத்தால் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்தது.

4-ம் நாள் ஆட்டமான இன்று (சனிக்கிழமை) இங்கிலாந்தால் பெரிய ரன்களைக் குவிக்க முடியவில்லை. 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக பேர்ஸ்டோவ் 113 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிக்கபுரோ கபடி லீக்: ஹரியாணாவுக்கு 3-ஆவது வெற்றி

122 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது ஆஸ்திரேலியா. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரை 3 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார் மார்க் வுட். ஓரளவு தொடக்கத்தைத் தந்த மார்கஸ் ஹாரிஸ் 27 ரன்களுக்கு ஜேக் லீச் சுழலில் வீழ்ந்தார்.

இதன்பிறகு, மார்னஸ் லபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் பாட்னர்ஷிப் அமைக்கத் தொடங்கினர். உணவு இடைவேளையில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு இந்த முக்கியமான பாட்னர்ஷிப்பை பெரிய ரன்கள் எடுக்க விடாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பிரித்தனர்.

லபுஷேன் 29 ரன்களுக்கும், ஸ்மித் 23 ரன்களுக்கும் முறையே வுட் மற்றும் லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

இதனால், ஆஸ்திரேலிய அணி சரிவைச் சந்தித்து விளையாடி வருகிறது.

சற்று முன்பு வரை 34 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா.

உஸ்மான் கவாஜாவும், கேமரூன் க்ரீனும் விளையாடி வருகின்றனர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>