இங்கிலாந்து போராட்டம் வீண் போகவில்லை: 4-வது டெஸ்ட் டிரா

ஆஸ்திரேலியாவுடனான ஆஷஸ் 4-வது டெஸ்ட் ஆட்டத்தை இங்கிலாந்து போராடி டிரா செய்தது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் 4-வது டெஸ்ட் ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 416 ரன்களும், இங்கிலாந்து 294 ரன்களும் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், இங்கிலாந்து வெற்றிக்கு 388 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.

4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கிய 5-ம் நாள் ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் ஹசீப் ஹமீத் 9 ரன்களுக்கு ஸ்காட் போலண்ட் பந்தில் ஆட்டமிழந்தார். டேவிட் மலானும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் நாதன் லயான சுழலில் போல்டானார்.

நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து விளையாடி வந்த ஸாக் கிராலேவை கேமரூன் க்ரீன் சிறப்பான யார்க்கர் பந்தால் ஆட்டமிழக்கச் செய்தார். கிராலே 77 ரன்கள் எடுத்தார்.

இதன்பிறகு, ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களைச் சோர்வடையச் செய்தனர்.

இந்த இணையைப் பிரிக்க ஆஸ்திரேலியா சிரமப்பட்டது. 25 ஓவர்களுக்கு தாக்குப்பிடித்த ரூட், ஸ்டோக்ஸ் இணையை போலண்ட் பிரித்தார். ரூட் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

இதையும் படிக்கஐசிசி டிசம்பா் மாத சிறந்த வீரா்கள்பட்டியலில் மயங்க் அகா்வால்

இதையடுத்து, ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், அரைசதம் அடித்து நம்பிக்கையளித்து வந்த ஸ்டோக்ஸ் 60 ரன்களுக்கு லயான் சுழலில் ஆட்டமிழந்தார்.

இதனால், ஆஸ்திரேலியா வெற்றி வாய்ப்பு திறந்தது. ஆனால், பேர்ஸ்டோவுடன் இணைந்து ஜாஸ் பட்லர் நிதானம் காட்டத் தொடங்கினார். ஓவர்கள் குறைய குறைய ஆஸ்திரேலியா வெற்றி வாய்ப்பு குறையத் தொடங்கியது.

இந்த நிலையில், கேப்டன் பேட் கம்மினஸ் ஒரே ஓவரில் இரண்டு சிறப்பான பந்துகளால் பட்லர் மற்றும் மார்க் வுட் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஜேக் லீச்சுக்கு ஸ்டிரைக்கை தராமால் பேர்ஸ்டோவ் போராடினார். ஆனால், அவரும் 41 ரன்கள் எடுத்திருந்தபோது போலண்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, லீச் மற்றும் ஸ்டுவர்ட் பிராட் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவைத் திணறடித்தனர். கடைசி 3 ஓவர்கள் தாக்குப்பிடித்தால் டிரா என்ற நிலையில் இங்கிலாந்தும், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலியாவும் இருந்தன. 

நேரக் கட்டுப்பாடு காரணமாக சுழற்பந்துவீச்சுக்கு மட்டுமே வாய்ப்பு இருந்தது. இதனால், ஸ்டீவ் ஸ்மித் பந்துவீசினார். திருப்புமுனையை உண்டாக்கும் வகையில், லீச் (26) விக்கெட்டை வீழ்த்தினார் ஸ்மித்.

கடைசி 2 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே ஆஸ்திரேலிய வெற்றிக்குத் தேவைப்பட்டன. ஆனால், லயான் மற்றும் ஸ்மித் ஓவரை முறையே பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பாக எதிர்கொள்ள ஆட்டம் டிராவில் முடிந்தது.

102 ஓவர்கள் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது.

இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த உஸ்மான் கவாஜா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>